இந்திய இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் (எச்.ஏ.எல்) நிறுவத்தின் முன்னாள் உயர்மட்டத் தலைவர் டி. சுவார்ணா ராஜுவின் பேட்டிக்கு பிறகு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் எனக் கூறி உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையின் ஒரு அறிக்கையின் படி, எச்.ஏ.எல் நிறுவத்தின் முன்னாள் உயர்மட்டத் தலைவர் டி. சுவார்ணா ராஜு தனது பேட்டியில் கூறியது, 


இந்தியாவில் ரஃபெல் விமானங்களை எச்.ஏ.எல் நிறுவனத்தால் உருவாக்க முடியும். அதற்கான தகுதியும், திறமையும் உண்டு. எச்.ஏ.எல் உடன்படிக்கை படி குறிப்பிட்ட விலைக்குள் விமானங்களை தயாரிக்க முடியாத நிலை ஏற்படலாம் என்பதை ஒப்புக் கொள்கிறேன். அதேவேளையில் ரஃபெல் விமானங்களை கட்டமைக்கும் திறமை எச்.ஏ.எல் நிறுவனத்துக்கு இல்லை எனக்கூறுவது ஏற்க முடியாது. எச்.ஏ.எல்(HAL) நிறுவத்தால் 25 டன் கொண்ட சூஹோய்-30 போர் விமானம் உருவாக்கும் போது, நிச்சயமாக ரஃபெல் போர் விமானங்களையும் உற்பத்தி செய்ய முடியும் எனவும் கூறியுள்ளார். 


 



கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த இந்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், டசால்ட் நிறுவனம் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் நடத்தி பேச்சுவார்த்தையில், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் ரஃபெல் விமானங்களை தயாரிக்க போதிய திறனை பெற்று இருக்கவில்லை என்று கூறியது, இதனால் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு வழங்க முன்வரவில்லை. ரபேல் போர் விமானங்களை தயாரிப்பது தொடர்பாக டசால்ட் நிறுவனத்துக்கும், இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்துக்கு இடையே ஒப்பந்தம் ஏற்படவில்லை என தெரிவித்திருந்தார். 


இந்நிலையில், எச்..ஏ.எல் நிறுவத்தின் முன்னாள் உயர்மட்டத் தலைவர் டி. சுவார்ணா ராஜுவின் பேட்டியை அடுத்து, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், இந்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் ரஃபெல் விமான ஒப்பந்தம் குறித்து கூறியது "பொய்" என நிரூபணம் ஆகியுள்ளது. எனவே அவர் உடனடியா பதவி விலக வேண்டும் என கூறியுள்ளார்.