ரகுராம் ராஜனுக்கு நோபல் பரிசு?
ஒவ்வொரு ஆண்டும் இலக்கியம், கலை, அறிவியல் என பல்வேறு துறைகளை சார்ந்த அறிஞர்களுக்கு நோபல் பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
சர்வதேச ஆலோசகர்கள் இந்த நிகழ்வில் பங்குபெற்று, ஒவ்வொரு நபர்கள் குறித்தும் அவர்களின் செயல்பாடுகள் குறித்தும் பரிசீலித்த பின்னர் தகுதியான நபர்களுக்கு இந்த பரிசை அறிவித்து வழங்குகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ஒன்று, இந்த ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
நடப்பாண்டில், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெறும் வாய்ப்புள்ளவர்கள் பட்டியலை தயாரித்துள்ளது. இதில், இந்திய ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் பெயர் இடம்பெற்றுள்ளது.
இந்தாண்டில், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெறும் வாய்ப்பு உள்ளதாக கிளாரிவேட் அனலிடிக்ஸ் தயாரித்துள்ள பட்டியலில் ஆறு பேர் இடம்பெற்றுள்ளனர். அதில் ரகுராம் ராஜன் பெயரும் இடம்பெற்றுள்ளது. கடந்த 15 ஆண்டுகளில், கிளாரி வேட் நிறுவனம் தயாரித்த பட்டியல்களில் இடம்பெற்றவர்களில், 45 பேர் நோபல் பரிசு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.