புதுடெல்லி: டெல்லியில் இன்று காலை காங்கிரஸ் எம்.பிக் கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்து கொள்ள வில்லை, காங்கிரஸ் துணைத் தலைவரான ராகுல் காந்தி தலைமை இந்த கூட்டம் நடைபெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்போது பேசிய அவர்:-


பிரதமர் மோடி டி.ஆர்.பி ரேட்டிங் அரசியலை நடத்துகிறார். பரபரப்பு விளம்பரமே அவருக்கு தேவை. அரசியல் கட்டமைப்பில் அனுபம்மிக்கவர்களை தாண்டி முடிவெடுக்கும் ஒரு பிரதமரை கூட காங்கிரஸ் இதுவரை நாட்டுக்கு வழங்கியதில்லை. டி.ஆர்.பி ரேட்டிங் கிடைக்கும் என்பதற்கா திட்டங்களை அறிவிக்கும் எந்த பிரதமரையும் நாம் நாட்டுக்கு வழங்கவில்லை. ஆனால், மோடி அவ்வாறு தன்னிச்சையாக முடிவெடுப்பவராக உள்ளார்.


இப்போது காஷ்மீர் பற்றி எரியும் நிலையில், மோடியோ அமைதியாக உட்கார்ந்து கொண்டு உள்ளார். பாஜகவும், பி.டி.பி கட்சியும் காஷ்மீரில் சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துள்ளன. பிரதமரின் அரசியல் நகர்வுகள், தேச விரோத சக்திகளுக்கு ஊக்கம் கொடுத்து வளரச் செய்துள்ளது.


நோட்டு செல்லாது அறிவிப்பினால் ஏற்படும் விளைவுகள் என்னவென்று பிரதமர் யோசிக்கவில்லை என்று ராகுல் காந்தி கூறினார். மேலும் அவர் கூறுகையில் ஒரு தனிநபரின் கையில் அதிகாரம் செறிவு நாட்டுக்கு நல்லதல்ல இதனால் நாட்டுக்கு ஆபத்தே வர கூடும் என்றார்.