ராகுல் டிராவிட் வீட்டிற்கு மாற்றப்பட்டார், வாக்காளர்களின் பட்டியலில் பெயர் சேர்க்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்த்ள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட், கர்நாடக மாநில தேர்தல் ஆணையத்தின் தூதராக இருக்கிறார். இவர், 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய வேண்டும் என மக்களைக் கேட்டுகொண்டுள்ளார். அத்துடன் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.


இந்நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை அளிக்கக்கோரிய அவரே வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் மத்திய பெங்களூரு தொகுதிக்கு உட்பட்ட இந்திரா நகரில் வசித்து வந்தார். கடந்தாண்டு அக்டோபர் மாதம் RMV தொகுதிக்கு உட்பட்ட அஸ்வந்த் நகர் பகுதிக்கு அவர் மாறினார்.


கர்நாடகா தேர்தல் கமிஷனின் வர்த்தகத் தூதர் ராகுல் டிராவிட் பெயரைக் காணவில்லை என்று முன்னாள் மாநிலத் தேர்தல் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரர் தனது இல்லத்தை மாற்றிக் கொண்டு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டிய அவசியமில்லை என்று திங்கள்கிழமை தெரிவித்தார்.


இந்திரா நகர் தொகுதி வாக்காளர் பட்டியலில் இருந்து அவர் பெயர் நீக்கப்படுவதற்கான ஆவணங்கள் டிராவிட்டின் சார்பில் சமர்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், RMV தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் அவர் பெயரைச் சேர்ப்பதற்கான ஆவணங்களை அவர்கள் சமர்பிக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இது குறித்து சிறப்பு தேர்தல் தலைமை அதிகாரி ரமேஷ் கூறுகையில்,  ‘வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க கடந்த மார்ச் 16ம் தேதிக்குள் படிவம் 6 சமர்ப்பித்திருக்க வேண்டும். அப்படி சமர்ப்பிக்காவிட்டால் எதுவும் செய்ய முடியாது. ராகுல் சமர்ப்பிக்க தவறிவிட்டார். எனவே அவரது பெயர் நீக்கப்பட்டது’ என கூறினார்.