நரேந்திரமோடி போல் இல்லாமல் நான் மனிதனாக செயல்பட விரும்புகிறேன் என்ற தவற தகவலை டுவிட்டர் மூலம் பதிவிட்டதற்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் விலைவாசி உயர்வு குறித்துநேற்று கூறிய போது;- தற்போது சமையல் எரிவாயு, பருப்பு வகைகள், தக்காளி, வெங்காயம், பால் மற்றும் டீசல் உள்ளிட்டவற்றின் விலைகளை பதிவிட்டிருந்தார். அதில் பருப்பு விலை ரூ. 45 லிருந்து ரூ. 80 ஆனதைக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அதன் விலையேற்றம் தற்போது  77% ஆகும் ஆனால் அவர் அதை 177% என பதிவிட்டுள்ளார்.


இதை கண்ட பா ஜ க தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். அதன் பின் அந்த டிவீட்பதிவு  பிறகு நீக்கப்பட்டு சரியான புள்ளி விவரத்துடன்கூடிய புதிய டிவீட் பதியப்பட்டது. ஆனால் முந்தைய டுவீட்டின் பதிவு ஸ்கிரீன் ஷாட் எடுக்கப்பட்டு அதைப்  பா ஜ க ஆதரவாளர்கள் ராகுலின் தவறு என்று சுட்டிக்காட்டினர்.


இதற்கு பதில் அளிக்கும் விதமாக இன்று டுவிட்டரில் ராகுல் வெளியிட்ட செய்தியில்;- பா ஜ க தலைவர்கள் எனது தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி, இனிமேலும் என் தவறை நீங்கள் சுட்டிக் காட்டினால் எனக்கு திருத்திக் கொள்ள உதவியாக இருக்கும். அனைவருக்கும் எனது அன்பை தெரிவிக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.