நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நேரில் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இதில் சோனியா காந்தி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதால் அவர் வரும் 23-ம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை புதிய சம்மன் அனுப்பியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில், டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராகுல்காந்தி இன்று விசாரணைக்கு ஆஜராவார் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனை ஒட்டி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இருவரும் காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தனர். பின்னர் அங்கிருந்து இருவரும் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு பேரணியாக செல்லத் தொடங்கினர். ராகுல் காந்தியிடம் விசாரணை நடைபெறுவதை ஒட்டி அமலாக்கத்துறை அலுவலகம் உள்ள பகுதியில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டிருந்தது. 


மேலும் படிக்க | ஸ்வப்னாவின் குற்றச்சாட்டு அரசியல் உள்நோக்கம் கொண்டது; பினராயி விஜயன் பதில்


மேலும் ராகுலுக்கு ஆதரவாக காங்கிரஸ் மூத்த தலைவர்களான ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல், திக் விஜய் சிங், ப.சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ், சச்சின் பைலட், முகுல் வாஸ்னிக், கவுரவ் கோகோய், ராஜீவ் சுக்லா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். 


டெல்லி மட்டுமின்றி ’சத்தியாகிரக யாத்திரை’ என்ற பெயரில் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். மேலும், ரன்தீப் சிங் சுர்ஜ்வாலா, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்ட உள்ளிட்ட தலைவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். 



ஒரு கட்டத்தில் காவல்துறையினர் ராகுலின் பேரணியைத் தடுத்து நிறுத்தியதைத் தொடர்ந்து, இருவரும் காரில் சென்றனர். அமலாக்கத்துறையின் மூத்த அதிகாரிகள் இருவர் ராகுல்காந்தியிடம் விசாரணை நடத்தலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது. இந்த விசாரணை 5-6 மணி நேரங்கள் நடத்தப்படலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலை முன்னிட்டு, இரு தினங்களில் மம்தா பானர்ஜி எதிர்க்கட்சிகளுடன் விசாரணை நடத்தவுள்ள நிலையில், ராகுல்காந்தியிடம் விசாரணை நடைபெறுகிறது.


மேலும் படிக்க | டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் திடீர் கைது


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR