மாட்டை கடத்தி செல்கிறார் என சந்தேகப்பட்டு தாக்குத்தலுக்கு உள்ளான ஒருவர் போலிசாரின் அலச்சியத்தால் மரணம் அடைந்துள்ளதாக வந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து வட மாநிலங்களில் நடைபெற்று வருகிற என்பது வேதனையே. ஆனால் அதற்க்கு அம்மாநில போலீசாரும் உடந்தையாக இருப்பது பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அல்வார் மாவட்டத்தில் உள்ள ராம்கர் கிராமத்தில் கடந்த 20 ஆம் தேதி இரவு அந்த பகுதியில் இரண்டு பேர் மாடுகளை ஓட்டிச் சென்றுள்ளனர், அதைப்பார்த்த பொதுமக்கள் திருட வந்ததாக நினைத்தது அவர்களை தாக்கி உள்ளனர். அதில் அக்பர் கான் என்பவர் கடுமையாக தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். போலீசார் தாக்குதலுக்கு உள்ளான நபரையும், மாட்டையும் மீட்டு உள்ளனர். மீட்ட மாட்டை ஒரு மணி நேரத்தில் 10 கி.மீ தொலைவில் இருந்த பசு பாதுகாப்பு மையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். 


ஆனால் தாக்குதலில் பலத்த காயம் அடைந்த அக்பர் கானை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல், விசாரணை என்ற பெயரில், அவரிடம் கிட்டத்தட்ட 3 முதல் 4 மணி நேரம் விசாரித்து உள்ளனர். பின்னர் அக்பர் கான் மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டார். ஆனால் அவர் அங்கு உயிரிழந்தார். பசு மீது காட்டிய நேசத்தை, அக்பர் கானின் மீதும் காட்டி இருந்தால், அவர் உயிருடன் இருந்திருப்பார். அவரது மரணத்திற்கு காரணம் போலிசாரின் அலச்சியம் தான் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


இதுக்குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது ட்விட்டர் பக்கத்தில், மோடியின் மிருகத்தனமான இந்தியாவில்மக்கள் நசுக்கப்பட்டு கொல்லப்படுகிறார்கள் என ஆவேசமாக கருத்தை தெரிவித்துள்ளார்.


 



ஆல்வார் நகரில் சந்தேக தாக்குதலுக்கு உள்ளாகி உயிருக்கு போராடிய அக்பர் கானை 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல 3 மணிநேரம் போலீசார் எடுத்துள்ளார்கள் ஏன்? அவர்கள் ஒரு தேநீர் இடைவெளியை எடுத்துள்ளனர். 


இதுதான் மோடியின் மிருகத்தனமான "புதிய இந்தியா". இங்கு மனித நேயம் அகன்று வெறுப்பாக மாற்றப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் நசுக்கப்பட்டு கொல்லப்பட்டு இறக்கிறார்கள் என ஆவேசமாக தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.