புது டெல்லி: முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி (Rahul Gandhi) சனிக்கிழமையன்று புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்ந்து வெளியேறுவதைக் காட்டும் வீடியோவை ட்வீட் செய்ததோடு, மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். இவர்களை குறித்து சரியான திட்டமிடல் செய்வதற்கும் அரசாங்கம் தவறி விட்டதாகக் கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"வேலையில்லாமல், நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்கொண்டு, இந்தியா முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான எங்கள் சகோதர சகோதரிகள் வீடு திரும்புவதற்கான வழியைக் கண்டுபிடிக்க போராடி வருகின்றனர். எந்தவொரு இந்திய குடிமகனையும் இப்படி நடத்த அனுமதித்திருப்பது வெட்கக்கேடானது. மேலும் இந்த வெளியேற்றத்திற்கு கையாள மத்திய அரசாங்கத்டாம் எந்தவிதமான தற்செயல் திட்டங்களும் இல்லை" என்று ராகுல் (Rahul Gandhi) தனது ட்வீட்டில் கூறியுள்ளார்.


 



டெல்லி-உ.பி. எல்லையில் தங்கள் வீடுகளுக்கு செல்ல பெருந்துகளை தேடி பெருமளவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் திரண்டு வருவதால், அரசாங்கம் தற்போது கையாண்டு வரும் ஊரடங்கு உத்தரவு சரியாக திட்டமிட வில்லை என்பதை இந்த வீடியோ எடுத்துக்காட்டுகிறது. மேலும் இந்த செயல்பாடுகளால் சமூக தொலைதூர நடவடிக்கைகள் செயலிழந்துள்ளது. மேலும் நாடு தழுவிய லாக்-டவுன் உத்த்ரவு நோக்கத்தை தோற்கடித்துள்ளது. 


உத்தரபிரதேசம் மற்றும் டெல்லி அரசாங்கங்கள் புலம்பெயர்ந்தோரை அந்தந்த இடங்களுக்கு கொண்டு செல்ல சிறப்பு பேருந்துகளை அறிவித்து நிலைமையைக் கட்டுப்படுத்த முயற்சித்துள்ளன.


உ.பி. 1,000 பேருந்துகளையும், டெல்லி 100 பஸ்களை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. புலம்பெயர்ந்தோர்களை ஒரே பேருந்துகளில் அதிக அளவில் ஏற்றப்பட்ட பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது தொற்றுநோய்களை பரப்பக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


மிகவும் பாதிக்கப்படக்கூடிய தொழிலாளர்கள் அவர்கள் இருக்கும் இடத்திலேயே தங்க வைப்பதை ஊக்குவிப்பதற்காக சமூக சமையலறைகள், இரவு தங்குமிடங்கள் மற்றும் அவர்களுக்கு வாடகை இல்லாத தங்குமிடம் உள்ளிட்ட நிலைமைகளைத் தீர்க்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளன.


செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தொடங்கி மூன்று வாரங்களுக்கான ஊரடங்கு உத்தரவு  போடப்பட்ட நிலையில், வெகுஜன மக்களின் வெளியேற்றம் தொடங்கியது, COVID-19 தடுப்பு நடவடிக்கை ஒரு மனிதாபிமான நெருக்கடியாக மாறும் என்ற கவலையை எழுப்பியுள்ளது.