நரேந்திர மோடி நாட்டை பிளவுபடுத்தி மோதலை ஊக்குவித்து வருவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றசாட்டு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு காடங்களாக நடைபெற்ற இருக்கிறது. இந்நிலையில், தங்களின் ஆட்சியை கைப்பற்ற ஆளும் கட்சியும், எதிர்கட்சிகளும் தீவிர பிரட்ச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 


இதை தொடர்ந்து, கேரள மாநிலம் வயநாட்டில் ராகுல் பரப்புரை மேற்கொண்டார்அப்போது மக்களிடம் பேசிய அவர்; தென் இந்தியாவில் போட்டியிட வேண்டும் என்று நான் முடிவு செய்தபோது, வயநாடு தொகுதிதான் மிகச்சிறந்த தொகுதி என்று நான் உணர்ந்தேன். ஏனெனில் பல்வேறு சிந்தனைகள், கலாச்சாரங்களை இந்த தொகுதி மக்கள் பிரநிதிதித்துவம் செய்கிறார்கள்.  மன் கி பாத் கூறுவதற்காக நான் இங்கு வரவில்லை. மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வந்து இருக்கிறேன் அவர் தெரிவித்தார். 


மோடியின் ஆட்சியில் ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் 27 ஆயிரம் பேர் வேலை இழந்து வருகின்றனர். நான் மோடியை போன்றவர் அல்ல. மோடி நாட்டை பிளவுபடுத்தி மோதலை ஊக்குவித்து வருகிறார். நான் போலி வாக்குறுதிகளை அளிப்பதற்காக இங்கு வரவில்லை. உங்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக இங்கு வந்துள்ளேன். 2 கோடி வேலைவாய்ப்புகள் அளிப்பேன். ரூ.15 லட்சம் உங்கள் வங்கி கணக்கில் போடுவேன் என  பொய் வாக்குறுதிகளை அளிக்க நான் விரும்பவில்லை" இவ்வாறு அவர் பேசினார்.