பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியின் வளர்ச்சி இல்லாத 100-வது நாள் நிறைவுக்கு வாழ்த்து என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரதமர் மோடி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மத்திய அரசு, அலுவலகத்தில் 100 நாட்களை நிறைவு செய்துள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து அளிக்கும் சட்டபிரிவு 370 மற்றும் 35A-வினை திரும்ப பெற்றல், ஆதார் வழியாக மக்கள் நலத் திட்டங்கள், என பல அதிரடி அறிவிப்புகளை இந்த காலக்கட்டத்தில் மோடி அரசு அறிவித்துள்ளது. எனினும் எதிர்கட்சியினரிடம் நன் மதிப்பினை பெற மோடி அரசு தவறிவிட்டது எனவே கூறப்படுகிறது.



இந்நிலையில், மோடி ஆட்சியின் வளர்ச்சி இல்லாத 100-வது நாள் நிறைவுக்கு வாழ்த்துக்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில்., "வளர்ச்சி இல்லாத 100-வது நாள் நிறைவு செய்த மோடி அரசுக்கு எனது வாழ்த்துகள். ஜனநாயகம் வீழ்த்தப்பட்டதும், விமர்சனத்தை தவிர்க்க ஊடகங்கள் மீதான கூடுதல் அடக்குமுறையும் நடக்கிறது. சரியான திட்டமிடலும், பணமும் தேவைப்படும் நிலையில், அது இல்லாத தலைமையும், பொருளாதார சூறையாடலும் தான் தற்போது நடக்கின்றன" என குறிப்பிட்டுள்ளார்.


நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்று மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சியை பிடித்தது. பாராளுமன்ற தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதையடுத்து தொடர்ந்து இரண்டாவது முறையாக நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக பதவியேற்றார். இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக அரசு மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சியமைத்து 100 நாள்கள் நிறைவடைந்துள்ளது.