அவதூறு வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது உச்சநீதிமன்றம். அதிகபட்ச தண்டனை விதித்ததற்கான காரணத்தை விசாரணை நீதிமன்ற நீதிபதி கூறவில்லை என உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட2 வருட தண்டனையை நிறுத்தி வைத்தால்  ராகுல் காந்தி, மீண்டும் நாடாளுமன்றம் செல்வதாக கூறப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மோடி பெயர் சர்ச்சை விவகாரம்:


கடந்த 2019ஆம் ஆண்டு நடைப்பெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது காங்கிரஸ் தலவராக இருந்த ராகுல் காந்தி, இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது தனது பிரச்சார உரையில் மோடியின் பெயர் தொடர்பாக அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. ‘மோடி’ என பெயர் வைத்தவர்கள் எல்லாம், எப்படி திருடர்களாக இருக்கிறார்கள் என்பது போல அவர் பேச்சு அமைந்திருந்ததாக கூறி பலர் அந்த சர்ச்சையை இன்னும் கிளப்பி விட்டனர். இதைத்தொடர்ந்து, ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில், அந்த மாநிலத்தின் பாஜக எம்,எல்.ஏ புர்னேஷ் மோடி அவதூறு வழக்கு தொடர்ந்தார். 


மேலும் படிக்க | ஞானவாபி மசூதியில் ஆய்வை தொடரலாம் அலகாபாத் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு


2 ஆண்டு சிறை:


இந்த வழக்கு விசாரணை சில மாதங்களுக்கு முன்பு நடைப்பெற்றது. அதில், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதனால் ராகுல் காந்தியின் எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் மேல்முறையீடு செய்திருந்தார். ஆனால், இந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 


இன்று ராகுல்காந்தியின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது. இதில், இவருக்கு ஆதரவாக வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதாடினார். தனது வாதத்தின் போது அவர், ராகுல் காந்திக்கும் எதிராக வழக்கு தொடர்ந்த புர்னேஷ் மோடி, தனது புலப்பெயர் மோடி இல்லை என ஒப்புக்கொண்டதாகவும் ராகுல் காந்தி எந்த வித உள்நோக்கத்துடனும் பேசவிலை என்பது உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார். மேலு, அவர் ராகுல் காந்தி மீது எழுந்த குற்றச்சாட்டு சமூகத்துக்கு எதிரான குற்றமோ அல்லது கொடிய குற்றங்கள் போன்றவையோ இல்லை என வாதாடினார். 


நீதிபதிகள் கேள்வி:


இன்றைய விசாரணையில், நீதிபதிகள் அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டது ஏன் என்றும் இந்த தண்டனையை விதிக்க சூரத் நீதிமன்றத்திற்கு அவசியம் ஏன் ஏற்பட்டது என்றும் கேஎடனர். இதையடுத்து ராகுல் காந்தியின் 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து  உத்தரவு பிறப்பித்தனர். பரபரப்பான இந்த தீர்ப்புக்கு பிறகு, ராகுல் காந்தி மீண்டும் நாடாளுமன்றம் திரும்புவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 


மேலும் படிக்க | ஓட்டல் அறையில் ரகசிய கேமரா... அந்தரங்க வீடியோ எடுத்து மிரட்டிய மர்மக்குரல்: சிக்கியது எப்படி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ