Farmers Protest: ராகுல் காந்தி ட்வீட் செய்த கவிதை
புது டெல்லி: ராகுல் காந்தி ட்விட்டரில் பக்கத்தில், `ஒரு கவிதையுடன் விவசாயிகளுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து கொண்டார். கவிதையின் மூலம், அவர் பிரதமர் மோடியை விமர்சித்தும், விவசாயிகளுக்காக தான் நாங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
புது டெல்லி: விவசாயிகள் போராட்டம்: மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் தொடர்கிறது. போராட்டக்காரர்கள் இந்த நாட்களில் டெல்லி ஜந்தர் மந்தரில் "கிசான் சன்சாத்" (Kisan Sansad) என்ற அடையாள குறியீட்டை நடத்தி போராடி வருகின்றனர். "கிசான் சன்சாத்" என்றால் "விவசாயிகள் பாராளுமன்றம்" என அர்த்தமாகும். இதற்கிடையே, இன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிற எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ஜந்தர் மந்தர் சென்றடைந்தனர்.
இதன் பிறகு, ராகுல் காந்தி ட்விட்டரில் பக்கத்தில், "ஒரு கவிதையுடன் விவசாயிகளுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து கொண்டார். கவிதையின் மூலம், அவர் பிரதமர் மோடியை விமர்சித்தும், விவசாயிகளுக்காக தான் நாங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டக் களத்திற்கு சென்ற தலைவர்கள் விவரம் பின்வருமாறு, ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், சிவசேனாவின் சஞ்சய் ராவத், ஆர்ஜேடியின் மனோஜ் ஜா, சிபிஐயின் வினய் விஸ்வம், சமாஜ்வாடி கட்சியின் எஸ்.டி.ஹசன் மற்றும் பிற எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, பாராளுமன்ற மாளிகையில் சந்தித்துக்கொண்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக "ஜந்தர் மந்தரை" அடைய முடிவு செய்தனர். பெகாசஸ், விவசாயச் சட்டங்கள் மற்றும் வேறு சில பிரச்சனைகளால் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து இரு அவைகளும் முடங்கி உள்ளது. இந்த அமர்வு ஜூலை 19 முதல் தொடங்கியது.
மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த எட்டு மாதங்களாக டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குளிர், வெயில், மழை, கொரோனா அச்சுறுத்தல் என எதைப் பற்றியும் கவலைப்படாமல் விவசாயிகள் போராடி வருகின்றனர். வேளாண் சட்டங்களை ரத்து செய்ய முடியாது, சில திருத்தங்களை செய்ய தயார் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுவரை விவசாயிகள் மற்றும் மத்திய அரசு இடையே நடைபெற்ற பேச்சுவாரத்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR