சர்ச்சைக்குரிய அயோத்தியில் சாமி தரிசனம் ராகுல் காந்தி
அயோத்தி அனுமன் கார்கி கோவிலில் சாமி தரிசனம் செய்தார் ராகுல் காந்தி. சர்ச்சைக்குரிய பகுதியான பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு முதல் முறையாக நேரு குடும்பத்தை சேர்ந்த ஒருவர் அயோத்தி செல்வது இதுவே முதல் முறையாகும்.
உ.பி அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு ராகுல் காந்தி 2,500 கி.மீ. கிசான்(விவசாயிகள்) யாத்திரையை தியோரியாவில் தொடங்கிய இந்த யாத்திரையில் பங்கேற்று வருகிறார்.
ராகுல் காந்தியை பார்க்க மக்கள் இரண்டு புறமும் திரண்டு இருந்தனர். அயோத்தியில் உள்ள அனுமன் கார்த்தி கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தார். இவருடன் காங்கிரஸின் மூத்த நிர்வாகிகளும் மற்றும் தலைவர்களும் சென்றனர்.
கடந்த 1990-ம் ஆண்டு ராகுல் காந்தியின் தந்தை ராஜீவ் காந்தி உ.பி.,யில் இதே போல யாத்திரை மேற்கொண்ட போது அனுமன் கார்கி கோவிலுக்கு செல்வதாக இருந்து, ஆனால் கடைசி நேரத்தில் பயணம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.