மக்களவை தேர்தல் 2019: டெல்லியில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணி?
2019 மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைய உள்ளதாக தகவல்.
2019 மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்கும் என்றும், அதற்க்கான ஒப்பந்தம் இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்படும் என காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளரான PC Chacko கூறியுள்ளார்.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் ஆலோசனை செய்யப்பட்டது. நேற்று ராகுல் காந்தி ராஜஸ்தானில் தேர்தல் பிரசாரத்தில் இருந்ததால், இன்று கூட்டணி குறித்து இறுதி முடிவை ராகுல் காந்தி அறிவிப்பார் எனத் தெரிகிறது.
அதே நேரத்தில், இந்த கூட்டணி குறித்து முன்னாள் முதல்வர் மற்றும் தில்லி காங்கிரஸ் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஷீலா தீட்சித் கூறுகையில், ராகுல் காங்கிரஸின் தலைவராக உள்ளார், அவர் ஒரு முடிவை எடுக்க முடிவு செய்தால், அனைவருக்கும் தெரியும். ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் பற்றி கூறிய ஷீலா தீட்சித், பிஜேபியை தோற்கடிப்பதற்காக அனைவரும் ஒன்றாக சேர வேண்டும் என்ற கருத்தை ஆம் ஆத்மி இதுவரை கூறவில்லை என்றார்.
நமக்கு கிடைத்த தகவலின் படி, உண்மையில், ஷீலா தீட்சித் மற்றும் டெல்லி காங்கிரஸின் சில மூத்த தலைவர்கள் ராகுல் காந்தியை சந்தித்து, ஆம் ஆத்மி கட்சியுடனான கூட்டணி குறித்து நீங்களே முடிவெடுங்கள் எனக் கூறியுள்ளனர். ராகுலுடனான சந்திப்பின் போது, கூட்டணி குறித்து இரண்டு விதமான கருத்துகள் வைக்கப்பட்டு உள்ளது.
ஒன்று டெல்லி காங்கிரஸ் கட்சித் தலைவர் ஷீலா தீட்சித், ஹரன் யூசுப், ராஜேஷ் லொலோதியா மற்றும் தேவேந்திர யாதவ் ஆகியோர் ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மற்றொன்று முன்னாள் சபாநாயகர் அஜய் மக்கான், சுபாஷ் சோப்ரா, தாஜெடர் பாபர் மற்றும் அர்விந்தர் சிங் லவ்லி ஆகியோர் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், இன்று ராகுல்காந்தி ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கூட்டணி குறித்து முடிவெடுக்க உள்ளார். அப்படி கூட்டணி அமைந்தால், டெல்லியில் உள்ள மொத்த 7 மக்களவை தொகுதியில் மூன்றில் காங்கிரஸ் கட்சியும், நான்கில் ஆம் ஆத்மி கட்சியும் போட்டியிடப் போவதாக தகவல் கிடைத்துள்ளது.