இந்தியர்களை வங்கி வாசலில் நிறுத்திவிட்டு அதானி வீட்டு வாசலில் நின்றவர் மோடி என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் மக்களவை தேர்தல் ஆனது வரும் ஏப்ரல் 11-ஆம் நாள் துவங்கி ஏழு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சி தலைவர் வேட்பாளர் பட்டியல் அறிவித்தல், தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளுதல் என ஆரவாரம் காட்டி வருகின்றனர். 


அந்த வகைல் இன்று அசாம் மாநிலம் லக்மிபூரில் தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது...


பண மதிப்புபிழப்பின் போது வங்கியின் வாசலில் நீண்ட வரிசையில் நின்றது ஏழை மக்களே தவிர மெஹுல் சோக்சி, நிரவ் மோடி, அனில் அம்பானியோ இல்லை என தெரிவித்தார். மேலும் இந்தியாவின் திருடர்கள் பணத்தைக் கொள்ளையடித்து விட்டு நம் காவலாளி உதவியுடன் நாட்டை விட்டு இவர்கள் பறந்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.


தொடர்ந்து பேசிய அவர்., "நீங்கள் எப்போதாவது, எங்காவது நம் காவலாளியை விவசாயிகள் வீட்டு வாசலிலோ, தொழிலாளர்கள் வீட்டு வாசலிலோ பார்த்திருக்கிறீர்களா? ஆனால் கவுதம் அதானி வீட்டு வாசலிலும் அனில் அம்பானி வீட்டு வாசலிலும் ஏராளமான காவலாளிகள் இருப்பதாக தெரிவித்தார்.


கருப்புப் பணத்தை இந்தியாவிற்கு கொண்டு வந்து அனைவரது கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவேன் என தெரிவித்தார் மோடி, ஆனால் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அமித் ஷா அது வெறுஜ் ஜும்லா என்று அம்பலப் படுத்திவிட்டார் எனவும் குற்றம் சாட்டினார்.


காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் அஸாம் குடியுரிமை மசோதா நிச்சயமாக நிறைவேறாது. காங்கிரஸினால் தான் அந்த மசோதா ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.


குறைந்தபட்ச வருவாய்க்கான ஆண்டுக்கு ரூ.72,000 ரூபாய் நாட்டின் 20% ஏழைக்குடும்பங்களின் பெண்கள் கணக்கில் வங்கிகளில் சேர்க்கப்படும். நாட்டின் 5 கோடி குடும்பங்களுக்கு இந்த உதவி பொருளாதாரத்தை புத்துணர்வுப் படுத்தும் எனவும் குறிப்பிட்டு பேசினார்.