ப.சிதம்பரத்தின் 106 நாள் சிறைவாசம் ஒரு பழிவாங்கும் செயல்: ராகுல் காந்தி
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தது “வஞ்சகம் மற்றும் பழிவாங்கும் செயல்” என்று முன்னால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.
புது டெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தது “வஞ்சகம் மற்றும் பழிவாங்கும் செயல்” என்று முன்னால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார். மேலும் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன். நியாயமான விசாரணையில் அவர் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க முடியும் என்று நான் நம்புகிறேன்” என்றும் ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.
மூன்று நீதிபதிகள் கொண்ட நீதிபதி ஆர் பானுமதி தலைமையிலான உயர் நீதிமன்றத்தின் பெஞ்ச் இன்று (புதன்கிழமை) காலை 74 வயதான ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியது. ஆனால் முன் அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என்று அவருக்கு உத்தரவிட்டது.
ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டது.....!
கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி இரவு ப. சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது. அதன்பின்னர் 15 நாள் சிபிஐ காவல் முடிந்து மீண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்பொழுத்து ரூஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றம் ப.சிதம்பரத்தை செப்டம்பர் 19 வரை நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. திமன்ற காவல் முடிந்ததால் மீண்டும் அவரை ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, வரும் அக்டோபர் 3 ஆம் தேதி வரை ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டார். இப்படி ஒவ்வொரு முறையும் காவல் நீடிக்கப்பட்டது.
ப. சிதம்பரம் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கக் கோரிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை எதிர்த்து சிபிஐ தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டு வந்தது. இப்படி மாறி மாறி இருதரப்பினரும் மனுக்களை தாக்கல் செய்தனர். இறுதியாக இன்று அவருக்கு நிபந்தனையுடன் ஜாமீன் கிடைத்தது.