சித்து-வின் பாக்., மீதான காதல் குறித்து ராகுல் பதிலளிக்க வேண்டும் -அமித்ஷா!
காங்கிரஸ் மூத்த தலைவர் நவாஜோத் சிங் சித்து-ன் தேர்தல் பிரச்சாரத்தில் எழுப்பப்பட்ட பாக்கிஸ்தான் ஆதரவு கோஷங்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதில் அளிக்க வேண்டும் என பாஜக தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்!
காங்கிரஸ் மூத்த தலைவர் நவாஜோத் சிங் சித்து-ன் தேர்தல் பிரச்சாரத்தில் எழுப்பப்பட்ட பாக்கிஸ்தான் ஆதரவு கோஷங்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதில் அளிக்க வேண்டும் என பாஜக தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்!
ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தல்களுக்கான பிரச்சாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் நவாஜோத் சிங் சித்து ஈடுப்பட்டார். அப்போது பிரச்சாரத்தில் அவர் உரையாற்றிய போது இந்தியாவிற்கு எதிராக "பாக்கிஸ்தான் ஜிந்தாபாத்" என்னும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த விவகாரம் தற்போது ஊடகங்களுக்கு பெரும் விவாதப் பொருளாய் மாறியுள்ளது.
இந்நிலையில் இதுதொடர்பாக பாஜக தலைவர் அமித்ஷா கருத்து தெரிவிக்கையில்... "பாக்கிஸ்தான் ராணுவத்துடன் சித்து தோழமையுடன் இருப்பதால் தான் அவரது கூட்டத்தில் இவ்வாறான முழக்கங்கள் எழுகிறது" என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக நேற்றைய தினம் ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தல் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அமித்ஷா அவர்கள் இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதில் அளிக்க வேண்டும் என குறிப்பிட்டார். சித்துவின் பாக்கிஸ்தான் மீதான காதல் குறித்த காங்கிரஸ் தலைவர் பதில் அளித்தே ஆக வேண்டுமென வலியுறுத்தினார்.
சித்துவின் இந்த சர்ச்சைக்குறிய வீடியோவினை ZEE News வெளியிட்ட பின்னர் அமித்ஷாவின் இந்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. முன்னதாக ZEE News இந்த செய்தியினை வெளியிட்ட பின்னர் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா "குறிப்பிட்ட வீடியோவானது சித்தரிக்கப்பட்டது, அதில் எழுப்பப்படும் கோஷங்கள் 'சட் ஸ்ரீ அகல்' என்பதே தவிற 'பாக்கிஸ்தான் ஜிந்தாபாத்' இல்லை என குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக ஆய்வு மேற்கொண்ட ZEE News, காங்கிரஸ் சுமத்தும் பொய் குற்றச்சாட்டினை மக்களுக்கு வெளிப்படுத்தியது.