`பதறுகிறார் மோடி... இன்னும் கொஞ்ச நாளில் மேடையில் அழுவார் பாருங்கள்` - ராகுல் காந்தி கணிப்பு
Rahul Gandhi Slams PM Modi: பிரதமர் மோடியின் பேச்சில் இப்போது பதற்றம் தெரிகிறது என்றும் கூடிய விரைவில் அவர் மேடையில் கண்ணீர் விடக்கூடும் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
Rahul Gandhi Slams PM Modi: 18வது மக்களவை தேர்தல் நாடு முழுவதும் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப். 19ஆம் தேதி நடைபெற்ற நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப். 26) நடைபெற்று வருகிறது. முதல் கட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில் இன்றைய இரண்டாம் கட்டமாக கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட 13 மாநிலங்களின் 89 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
மே 6, மே 13, மே 20, மே 26, ஜூன் 1 ஆகிய தேதிகளில் முறையே அடுத்தடுத்த கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அந்த வகையில் பாஜக - காங்கிரஸ் கட்சிகள் நாடு முழுவதும் பரபரப்பாக பரப்புரை செய்து வருகிறது. மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிப்பது மட்டுமின்றி 400 தொகுதிகளுக்கும் மேல் கைப்பற்றி வரலாற்று சாதனை படைக்க வேண்டும் என பாஜகவும், 10 வருடங்களுக்கு மீண்டும் ஆட்சியமைக்க வேண்டும் என்ற முனைப்போடும் இந்த தேர்தலை சந்திக்கிறது. பலமான தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்க்க, பல்வேறு மாநிலங்களில் பாஜகவின் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து காங்கிரஸ் இந்தியா கூட்டணியை ஏற்படுத்தி உள்ளது.
ராகுல் காந்தி சராமாரி தாக்கு
ஜூன் 4ஆம் தேதிதான் யார் இந்தியாவில் ஆட்சியை கைப்பற்றப் போகிறார்கள் என்பது தெரியவரும். இந்நிலையில், விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் தேர்தல் பரப்புரையில் ராகுல் காந்தியின் இன்று பேசியது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆளும் பாஜகவையும், பிரதமர் மோடியையும் அவர் கடுமையாக சாடி உள்ளார்.
மேலும் படிக்க | மக்களவை தேர்தல்... 2ம் கட்ட வாக்குப்பதிவு... டாப் 5 பணக்கார - ஏழை வேட்பாளர்கள்!
கர்நாடகாவில் பிஜாபூரில் நடைபெற்ற பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி,"இப்போதெல்லாம் நரேந்திர மோடி உரையாற்றும்போது பதற்றத்துடன் காணப்படுகிறது. இன்னும் கொஞ்ச நாள்களில் அவர் மேடையில் கண்ணீர் விடக்கூடும்" என்றார்.
'மக்களை திசைத்திருப்பும் மோடி'
மேலும் அவர்,"மோடி மக்களின் கவனத்தை திசைத் திருப்ப பார்க்கிறார். சில நேரங்களில் இந்தியா - சீனா என பேசுவார், சில நேரங்களில் உங்களின் தட்டுகளை அடித்து சத்தம் எழுப்ப சொல்லுவார், சில நேரங்களில் உங்களின் மொபைல் டார்சை அடிக்க சொல்லுவார்" என தாக்கிப் பேசினார்.
பிரதமர் மோடி சமீபத்தில் ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசியதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியிருந்ததை தொடர்ந்து, ராகுல் காந்தியின் இந்த பேச்சு அமைந்துள்ளது. மேலும், பாஜக இந்த தேர்தலில் 400 தொகுதிகளை கைப்பற்றும் என அக்கட்சியினர் கூறி வந்த நிலையில், முதல் கட்ட வாக்குப்பதிவுக்கு பின் அந்த மனநிலை தலைகீழாக மாறியிருக்கிறதாக காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
'இஸ்லாமியர்களுக்கு எதிராக...'
இந்த இரண்டாம் கட்ட வாக்குப்பதிவை முன்னிட்ட பிரச்சாரத்தில் பிரதமர் மோடி, காங்கிரஸ் பொது சொத்துகளை குழந்தைகள் அதிகம் உள்ள 'ஊடுருவல்காரர்களுக்கு' பகிர்ந்தளித்துவிடும் எனவும் அக்கட்சியின் தேர்தல் அறிக்கை முஸ்லீம் லீக்கின் சாயலை ஒத்திருப்பதாகவும் தொடர்ந்து பேசி வந்தார். இது இஸ்லாமியர்களுக்கு எதிராக பிரதமர் மோடி பேசுவதாக பல தரப்பில் இருந்து குற்றச்சாட்டுகள் வந்தன. இதுகுறித்து தேர்தல் ஆணையமும் பாஜகவுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அது எஸ்சி, எஸ்டி மக்களின் இட ஒதுக்கீட்டை குறைத்து அதனை இஸ்லாமியர்களுக்கு வழங்கிவிடும் என்றும் பிரதமர் மோடி தனது பிரச்சாரங்களில் பேசி வந்தது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ