பெண்களை மரியாதையுடனும், கெளரவத்துடனும் நடத்த இனி எல்லோரும் கற்றுக்கொள்வார்கள் என ராகுல் காந்தி கருத்து. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பணியிடங்களில் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டதை வெளியே சொல்லாமல் புழுங்கிக்கொண்டிருந்த பெண்கள், சமூக வலைதளங்களில் #MeToo இயக்கத்தின் மூலம் தற்போது தங்களுக்கு ஏற்பட்ட நிலையைக் கூறிவருகின்றனர். திரையுல பிரபலங்கள் தொடங்கி, பல்வேறு துறையிலும் நடந்த பாலியல் ரீதியான பாதிப்புகளை பெண்கள் வெளியிட்டு வருகின்றனர்.


#MeToo என்னும் ஹாஸ்டேக் மூலம் தங்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமைகள் குறித்து உலகெங்கிலும் உள்ள பெண்கள் தெரிவித்து வருகின்றநிலையில், சமீபத்தில் பாலிவுட் திரையுலகினை கதிகலங்க வைத்த இந்த வழக்கம், தற்போது தமிழகத்தையும் எட்டியுள்ளது.


தற்போது தமிழக திரையுலக பிரபலங்கள் மீதும் #MeToo ஹாஸ்டேக் பயன்படுத்தி பாலியல் வன்கொடுமை புகார்கள் பதியப்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் பாடகி சின்மயி பாடல் ஆசிரியர் வைரமுத்து மீது பாலியல் புகாரினை பதிவு செய்தார். தனக்கு 17 வயது இருக்கும் போது வைரமுத்து அலுவலகத்திற்கு தான் சென்று இருந்ததாகவும் அப்போது வைரமுத்து தன்னை கட்டி அணைத்து தவறாக நடக்க முயன்றதாகவும் சின்மயி புகார் கூறி இருந்தார். இதற்க்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 


இந்நிலையில், #MeToo விவகாரம் குறித்து பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிப்பில் "பெண்களை மரியாதையுடனும், கெளரவத்துடனும் நடத்த இனி எல்லோரும் கற்றுக்கொள்வார்கள். மாற்றத்தை உருவாக்க உண்மைகளை உரக்கவும் தெளிவாகவும் சொல்ல வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.