கட்சி ஆரம்பித்‌த நடிகர்கள் யாரும் ஆட்சி அமைக்கவில்லை - சி. விஜயபாஸ்கர்!

அதிமுக ஆட்சிக்கு வந்ததும் மகளிருக்கு எடப்பாடி பழனிச்சாமியிடம் ரூ.2000 வாங்கி கொடுத்து விடுவோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Oct 6, 2024, 04:22 PM IST
  • அதிமுக கப்பல் போன்றது.
  • சூறாவளி வந்ததும் லேசா நடுக்கம் இருக்கும்.
  • அதிமுக என்ற கப்பல் கரை சேரும்.
கட்சி ஆரம்பித்‌த நடிகர்கள் யாரும் ஆட்சி அமைக்கவில்லை - சி. விஜயபாஸ்கர்! title=

கயத்தாரில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், தொண்டனை நம்பி ஆரம்பிக்கப்பட்ட கட்சி தொடங்கியவர் எம்.ஜூ.ஆர். சிவாஜி கணேசன், பாக்கியராஜ், டி.ஆர். ராஜேந்திரன் உள்ளிட்ட பல நடிகர்கள் கட்சி ஆரம்பித்தனர். இப்பவும் ஆரம்பிக்கின்றனர். ஆனால் எம்ஜிஆர் மன்றம் என்று ஆரம்பித்து கட்சியாக தொடங்கிய அதிமுக மட்டுமே ஆட்சியைப் பிடித்தது. தேர்தலில் படுத்துக் கொண்டே தானும் வெற்றி பெற்று, கட்சியையும் வெற்றி பெற வைத்தவர் எம்.ஜூ.ஆர், அதிமுக கப்பல் போன்றது. சூறாவளி வந்ததும் லேசா நடுக்கம் இருக்கும். அப்போது குதிக்க வேண்டாம், படகில் போக வேண்டாம். அவர்களால் கரை சேர முடியாது. அதிமுக என்ற கப்பல் கரை சேரும்.

மேலும் படிக்க | கரூர் விஜய் கட்சி தவெக நிர்வாகி அதிரடி கைது, பள்ளி ஆசிரியை பெயரில் கார் வாங்கி மோசடி

அதிமுக 2026ல் ஆட்சி அமைக்கும், மழை வரும் வரை சூரியன் பிரகாசமாக இருக்கும். மேகம் வந்ததும் சூரியன் மறைந்து விடும். அது போல தான் அதிமுக ஆட்சிக்கு வந்துவிடும். ஆந்திரா, தெலுங்கானா போன்று தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் வரும். அதிமுகவினர்  கட்சி வேஷ்டியை சலவை செய்து தயாராக வைத்துக் கொள்ளுங்கள். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் மகளிருக்கு எடப்பாடி பழனிச்சாமியிடம் ரூ.2000 வாங்கி கொடுத்து விடுவோம். போன மச்சான் திரும்பி வந்தது போல திமுக ஆட்சியில் போன திட்டங்கள் அதிமுக ஆட்சி வந்ததும் வந்துவிடும் என்றார்.

செந்தில் பாலாஜி கெட்டிக்காரர் தான் - முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேச்சு 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மற்றும் கடம்பூர் செ.ராஜூ ஆகியோர் கலந்து கொண்டு பேசினார். அப்போது முன்னாள் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ பேசுகையில், பிறப்பால் பதவி கிடைப்பது திமுக, உழைப்பால் பதவி கிடைப்பது அதிமுக, கருணாநிதி மகன் மு.க.ஸ்டாலின், கருணாநிதி பேரன், மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் என்ற பிறப்பால் பதவிக்கு வந்தனர். மருத்துவத் துறையில் அதிக சாதனைகள் நிகழ்த்தி அதிக விருதுகளை பெற்றுத்தந்த ஒரை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தான். தற்போதைய மருத்துவதுறை அமைச்சர் ம.சு. - மாசு ஏற்படுத்தி விட்டார். சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் மருத்துவ துறையை கெடுத்து, மக்களின் வாழ்வினை கெடுத்து கொண்டிருக்கிறார். கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்ட காரணத்தினால் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை பிரதமர் மோடியே பாராட்டியுள்ளார். 

அதிமுக ஆட்சி காலத்தில் 11 மருந்துவ கல்லூரி கொண்டு வரப்பட்டது. தற்போதைய திமுக ஆட்சியில் ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கூட கொண்டு வரவில்லை. பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து திமுக ஆட்சிக்கு வந்து விட்டது. ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து என்றார்கள் அதை நிறைவேற்றவில்லை. ஒரு செங்கலை தூக்கி கொண்டு அலைந்த உதயநிதி ஸ்டாலினுக்கு - செங்கல் நிதி என்று மக்கள் அழைக்கின்றனர். திமுக கூட்டணியில் இருக்கும் 39 எம்.பிக்கள் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஏன் குரல் கொடுக்கவில்லை? செந்தில் பாலாஜி மீது பயத்தினால் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையில் செந்தில் பாலாஜி வாய் திறந்தால் தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தினால் அமைச்சர் வழங்கி உள்ளனர். செந்தில் பாலாஜி கெட்டிக்காரர் தான், அமைச்சர் செந்தில் பாலாஜி கையில் தான் திமுக உள்ளது என்றார்.

மேலும் படிக்க | 'தமிழகத்திற்கு வள்ளலார் வழியில் நிதி கொடுத்த பிரதமர் மோடி' - ஆளுநர் ஆர்.என். ரவி பரபரப்பு பேச்சு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News