கிசான் யாத்திரை தொடங்கினார் ராகுல்காந்தி
உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் ஆட்சியை பிடிப்பதற்காக சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் போன்ற கட்சிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கி உள்ளது. இதற்காக டெல்லி முன்னாள் முதல்-மந்திரி ஷீலா தீட்சித்தை உ.பி முதல்-மந்திரி வேட்பாளராக அறிவித்து தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது.
உத்தரபிரதேசத்தில் 2,500 கி.மீ. தூர பிரசார யாத்திரையை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தொடங்கினார் தொடங்கினார். தியோரியாவில் இருந்து டெல்லி வரையிலான "கிசான் யாத்திரை" என்று பெயரிடப்பட்டு உள்ளது.
யாத்திரையை தொடங்கிய ராகுல் பொதுமக்களை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். 2,500 கி.மீ. தூரம் யாத்திரை மேற்கொள்ளும் ராகுல் கிராமங்களில் மக்களுடன் அமர்ந்து விவாதிக்கவும் முடிவு செய்துள்ளார்.