ரஃபேல் விமான ஒப்பந்தம் குறித்து பிரதமர் மோடி என்னிடம் நேருக்கு நேர் விவாதத்திற்கு தயாரா? என காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி சவால்....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி பிரான்சிடம் இருந்து, ரபேல் போர் விமானங்களை வாங்க, ரூ. 58 ஆயிரம் கோடி மதிப்பில் ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில், இந்த கொள்முதல் ஒப்பந்தத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு குறித்த காங்கிரஸ் காட்சியின் புகாருக்கு பாஜக தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. 


இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டு கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது . முதல்கட்ட தேர்தல் கடந்த 12 ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து இரண்டாம் கட்ட தேர்தல் வரும் 20 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக அந்த மாநிலத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மீண்டும் ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மோடி மீது மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக தம்முடன் 15 நிமிட நேருக்கு நேர் விவாதத்திற்கு தயாரா என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளார். சட்டிஸ்கரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி அம்பிகாபுரில் செய்தியாளர்களிடம் பேசினார்.



அப்போது ரஃபேல் விமான பேரம் குறித்து தம்மை 15 நிமிடங்களுக்கு மட்டும் பேச அனுமதித்து மோடி பதில் அளிப்பாரா என ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார். ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான தமது கேள்விகளுக்கு பிரதமர் மோடியால் பதில் அளிக்க முடியாது என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.