2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின் போது பில்கிஸ் பானோ கூட்டுப் பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். பிரதமர் அவர்களே, உங்கள் வார்த்தைகளுக்கும் செயலுக்கும் உள்ள வித்தியாசத்தை நாடு முழுவதும் பார்க்கிறது என்றும், நாட்டுப் பெண்களுக்கு என்ன செய்தி கொடுக்கப் போகிறீர்கள் என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். கூட்டுப் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டனை அனுபவித்து வந்த 11 பேர் விடுதலை செய்யப்பட்டது பெரும் எதிர்ப்பை சந்தித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றிய பிறகு, நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் மோடி, "பெண்களுக்கு மரியாதை செலுத்துவது இந்தியாவின் முன்னேற்றத்திற்கு முக்கிய தூண் என்று கூறினார். அதேநாளில் பில்கிஸ் பானோ மீதான கூட்டுப் பலாத்கார குற்றவாளிகள் ஆகஸ்ட் 15 ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த விவகாரத்தை அனைத்து எதிர்க்கட்சிகளும் கையில் எடுத்துள்ளனர். பெண்களை குறித்து பாஜக என்ன நினைக்கிறது என்பதை இது காட்டுகிறது என்று எதிர்க்கட்சிகள் மத்திய அரசை குறிவைத்து வருகின்றனர். தற்போது இந்த விவகாரத்தில் மோடி அரசை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் குறிவைத்துள்ளார்.


மேலும் படிக்க: இந்தியாவில் இந்த சர்வாதிகாரத்துக்கு 'உண்மை' தான் முடிவு கட்டும் -ராகுல் காந்தி


ராகுல் காந்தி இன்று (புதன்கிழமை) தனது ட்வீட்டில் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்தார். "ஆசாதி கே அம்ரித் மஹோத்சவ்' நிகழ்ச்சியின் போது 5 மாத கர்ப்பிணிப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து 3 வயது சிறுமியைக் கொன்றவர்கள் விடுவிக்கப்பட்டனர். "பெண்கள் சக்தி பற்றி பொய் கூறும் நீங்கள் நாட்டு பெண்களுக்கு என்ன செய்தி சொல்கிறீர்கள்? பிரதமர் அவர்களே, உங்கள் வார்த்தைகளுக்கும் செயலுக்கும் உள்ள வித்தியாசத்தை நாடு முழுவதும் பார்க்கிறது." என ட்வீட் செய்துள்ளார்.



ஆகஸ்ட் 15-ம் தேதி குஜராத் அரசின் உத்தரவின் பேரில் பில்கிஸ் பானோ கூட்டுப் பலாத்கார குற்றவாளிகள் 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. சிறையிலிருந்து வெளியே வந்த அவர்களுக்கு மலர்கள் மற்றும் இனிப்புகள் வழங்கி வரவேற்றனர். அதன் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இவர்கள் 2002 குஜராத் கலவரத்தின் போது பில்கிஸ் பானோவை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகள். பலாத்காரத்திற்கு முன்பு பானோவின் குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேரைக் கொலை செய்தனர். இதில் பானோவின் மூன்று வயது சிறுமியும் அடங்கும். 


ஜனவரி 2008 இல், சிறப்பு சிபிஐ நீதிமன்றம் பில்கிஸ் பானோவின் குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேரைக் கூட்டுப் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது. பின்னர் பம்பாய் உயர் நீதிமன்றம் அவர்களின் தண்டனையை உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: பணக்காரர்களுக்கு ஒரு இந்தியா, ஏழைகளுக்கு ஒரு இந்தியா...பாஜகவை விமர்சித்த ராகுல்காந்தி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ