மக்களவை தேர்தலில் ராகுல் காந்தி கேரளாவின் அமேதி மற்றும் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார் என காங்கிரஸ் உறுதிப்படுத்தியுள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 18 வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதே சமயம், இரண்டாவதாக வயநாடு தொகுதியிலும் அவர் போட்டியிடயிருப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. எனினும், அது உறுதி செய்யப்படாமல் இருந்தது.


இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசியபோது, வயநாடு தொகுதியிலும் போட்டியிட ராகுல் காந்தி சம்மதம் தெரிவித்துள்ளார் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம் என்றார். அப்போது, அமேதி தொகுதியில் வெற்றி வாய்ப்பு சாதகமாக இல்லை என்பதால்தான் இரண்டாவது தொகுதியை ராகுல் காந்தி தேர்வு செய்தாரா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 




அதற்கு காங்கிரஸ் செய்தித்தொடர்பாள ரண்தீப் சிங் சுர்ஜேவாலா பதில் அளிக்கையில், பிரதமர் மோடி குஜராத் மாநிலத்தை விட்டுவிட்டு, வாரணாசியில் போட்டியிடவில்லையா? அதுபோலதான் இதுவும். அமேதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி மீண்டும் தோல்வி அடைவது உறுதி என்று பதில் அளித்தார்.