ராகுல் காந்தி ‘‘இத்தாலிக்கு திரும்பிச் செல்லுங்கள்’’ விவசாயிகள் கோஷம்
தனது தொகுதியான அமேதிக்கு சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
தனது தொகுதியான அமேதிக்கு சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
2019 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால், தனது சொந்த பாராளுமன்ற தொகுதியான உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று சென்றார். அங்கு நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்றார். அங்கு வந்த விவசாயிகள் ராகுல்காந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து, எங்கள் நிலையத்தை எங்களுக்கு கொடுங்கள் அல்லது வேலைவாய்ப்பை தாருங்கள் எனக்கூறி போராட்டம் நடத்தினர். அங்கிருந்த சில விவசாயிகள் ‘‘இத்தாலிக்கு திரும்பிச் செல்லுங்கள்’’ ராகுல்காந்தி என கோஷமிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரபப்பு ஏற்ப்பட்டது.
இந்த போராட்டத்திற்கு முக்கிய காரணம், 1980 ஆம் ஆண்டு ஜெயின் சகோதரர்கள் மூலம் அமேதியில் தொழிற்பேட்டை உருவாக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அப்பொழுது பிரதமராக ராகுல்காந்தியின் தந்தை ராஜீவ் காந்தி இருந்தார். ஆறு ஆண்டுகள் கழித்து 1986ல் உத்தர பிரதேச தொழில் வளர்ச்சி நிறுவனம் ஜெயின் சகோதரர்கள் நிறுவனத்துக்கு 65.57 ஏக்கர் நிலம் வழங்கியது. ஆனால் கடந்த 18 ஆண்டுகளாக அமேதியில் எந்த தொழிற்பேட்டை உருவாக்கவில்லை. அதனால் 2017 ஆம் ஆண்டு ஜெயின் சகோதரர்கள் நிறுவனத்துக்கு வழங்கிய நிலத்தை ஏலம் விடப்பட்டது. அப்பொழுது அந்த நிலத்தை ராகுல் காந்தியின் ராஜீவ்காந்தி பவுண்டேஷன் விலை கொடுத்து வாங்கியது.
ராஜீவ்காந்தி பவுண்டேஷன் விவசாயக் குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பு தருவதாக வாக்குறுதி அளித்தது. ஆனால் இதுநாள் வரை அமேதியில் எந்த தொழிற்பேட்டை தொடங்கவில்லை. அதனால் தான் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்தனர் விவசாயிகள்.