ராகுலின் இந்திய நீதிப் பயணம்: ஜனவரி 14 முதல் - மார்ச் 20 வரை, 6200 கிமீ, 14 மாநிலங்கள்!
Bharat Nyay YatraL 2024: லோக்சபா தேர்தலுக்கு முன், காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, பாரத் நியாய் யாத்ரா (இந்திய நீதி பயணம்) பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். ஜனவரி 14-ம் தேதி மணிப்பூரில் தொடங்கி மார்ச் 20-ம் தேதி மும்பையில் முடிவடையும்.
Rahul Gandhi Bharat Nyay Yatra: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தின் (Bharat Jodo Yatra) இரண்டாம் கட்ட பயணத்தை குறித்து காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதற்கு பாரத் நியாய் யாத்ரா (இந்திய நீதி பயணம்) என்று பெயரிடப்பட்டு உள்ளது. அதாவது 2024 லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக, ஜனவரி 14 ஆம் தேதி வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இருந்து இந்தப் பயணத்தைத் தொடங்கி மார்ச் 20 ஆம் தேதி மும்பையில் ராகுல் காந்தி முடிக்கவுள்ளார்.
இதுக்குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பொதுச் செயலாளர்கள் கே.சி.வேணுகோபால் மற்றும் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், "பாரத் ஜோடோ யாத்திரைக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சி பாரத் நியாய் யாத்திரையை நடத்தும்.
இந்திய நீதி பயணம்: 14 மாநிலங்கள்
இது மணிப்பூரில் தொடங்கி, நாகாலாந்து, அசாம், மேகாலயா, மேற்கு வங்காளம், பீகார், ஜார்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் குஜராத் வழியாகச் சென்று மகாராஷ்டிராவில் முடிவடையும்.
சுமார் 6200 கிலோமீட்டர் பயணம்
இந்தப் பயணத்தின் போது இளைஞர்கள், பெண்கள் மற்றும் விளிம்பு நிலை மக்களை ராகுல் சந்திக்கிறார். 14 மாநிலங்கள் வழியாகச் செல்லும் இந்தப் பயணத்தின்போது, பேருந்து மற்றும் கால்நடையாக சுமார் 6200 கிலோமீட்டர் தூரம் ராகுல் காந்தி பயணிக்க உள்ளர. பொருளாதாரம், வேலை வாய்ப்புகள், வறுமை ஒழிப்பு, சமூக நீதி, அரசியல் நீதிக்காக இந்த யாத்திரை நடைபெறும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்த யாத்திரையை கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கொடியசைத்து தொடங்கி வைக்கிறார் என்று தெரிவித்தார்கள்.
"நாங்கள் தயார்" காங்கிரஸ் மெகா பேரணி
இது தவிர, டிசம்பர் 28 ஆம் தேதி நாக்பூரில் ஒரு மாபெரும் பேரணியை காங்கிரஸ் கட்சி நடத்த விருக்கிறது. காங்கிரஸ் நிறுவன தினத்தையொட்டி, "நாங்கள் தயார்" என்ற தலைப்பில் 2024 லோக்சபா தேர்தலுக்கான பிரசாரத்தை மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நாளை (டிசம்பர் 28) தொடங்குகிறது. அதேநேரத்தில் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் நாக்பூரில் தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
2024 லோக்சபா தேர்தலுக்கான பிரசார மெகா பேரணியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உட்பட பலர் பங்கேற்க உள்ளனர்.
இந்திய ஒற்றுமைப் பயணம் (Bharat Jodo Yatra)
முன்னதாக, ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையை 7 செப்டம்பர் 2022 முதல் 30 ஜனவரி 2023 வரை மேற்கொண்டார். தமிழகத்தின் கன்னியாகுமரியில் தொடங்கி 145 நாள் பயணம் ஜம்மு காஷ்மீரில் நிறைவடைந்தது. இந்த 3570 கிலோமீட்டர் பயணத்தில் 12 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களை ராகுல் காந்தி பயணம் மேற்கொண்டார்.
பாரத் ஜோடோ பயணத்தின் போது, ராகுல் காந்தி 12 கூட்டங்களில் உரையாற்றினார். 100 க்கும் மேற்பட்ட கூட்டங்கள் மற்றும் 13 செய்தியாளர் சந்திப்புகளை நடத்தினார். அவர் நடைபயணத்தின் போது 275 க்கும் மேற்பட்ட விவாதங்களில் பங்கேற்றார்.
மேலும் படிக்க - காங்கிரஸ் போல தமிழகத்தில் திமுக ஒரு மிகப்பெரிய ஊழல் கட்சி - பாஜக
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ பயணத்தில் கட்சி தலைவர்கள், பிரபலங்கள், முன்னாள் நீதிபதி, முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர், எழுத்தாளர்கள், ராணுவ வீரர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதேபோல அதிகள் எதிர்க்கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர். தேசிய மாநாட்டின் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, பிடிபி தலைவர் மெகபூபா முப்தி, சிவசேனாவின் பால் தாக்கரே, ஆதித்யா தாக்கரே, பிரியங்கா சதுர்வேதி, சஞ்சய் ராவத் மற்றும் என்சிபியின் சுப்ரியா சூலே போன்ற எதிர்க்கட்சித் தலைவர்களும் பாரத் ஜோடோ யாத்திரையின் போது ராகுல் காந்தியுடன் சேர்ந்து பயணம் மேற்கொண்டார்.
நாட்டை அழிக்க முயலும் சித்தாந்தத்திற்கு எதிரான பயணம் -ராகுல்
ஸ்ரீநகரில், ஷேர்-இ-காஷ்மீர் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பாரத் ஜோடோ யாத்திரையின் முடிவில், ராகுல் பேசும் போது, "நான் இந்த யாத்திரையை எனக்காகவோ அல்லது காங்கிரஸுக்காகவோ மேற் கொள்ளவில்லை. நாட்டு மக்களுக்காக செய்தேன். இந்த நாட்டின் அஸ்திவாரத்தை அழிக்க முயலும் சித்தாந்தத்திற்கு எதிராக நிற்பதே எங்களின் நோக்கம்" எனக் கூறியிருந்தார்.
மேலும் படிக்க - “பிரதமர் மோடி என்றால் பநோத்தி” -ராகுல் காந்தி கடும் தாக்கு.. பாஜகவினர் பதிலடி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ