ராகுல்காந்திக்கு சூரத் நீதிமன்றம் விதித்த 2 ஆண்டுகள் தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. இன்று விசாரணைக்கு வந்த ராகுல்காந்தியின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில், வாட்சப்பில் வந்த வீடியோவின் அடிப்படையில் பாஜக எம்எல்ஏ குஜராத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாக, அதனை வைத்து தண்டனை கொடுக்கப்பட்டிருப்பதாக ராகுல் காந்தி தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம், ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட அதிகபட்ச தண்டனையான 2 ஆண்டுகள் ஏன் விதிக்கப்பட்டது என்பது குறித்து கீழமை நீதிமன்ற நீதிபதி எந்த விளக்கத்தையும் கொடுக்கவில்லை என கூறியதுடன், அந்த தண்டனையை நிறுத்தி வைப்பதாக தெரிவித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | அவதூறு வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!


இந்த தீர்ப்பு மூலம் இதுவரை தகுதியிழப்பை எதிர்கொண்ட  ராகுல்காந்தி மீண்டும் எம்பியாக தொடர்கிறார். இது குறித்து பேசிய காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் அதிரஞ்சன் சவுத்திரி, தீர்ப்பு நகல் கிடைத்தவுடன் இதனை உடனடியாக மக்களவை சபாநாயகருக்கு தெரியப்படுத்தி, நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ராகுல் காந்தி பங்கெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இனி ராகுல்காந்தி நாடாளுமன்றம் வருவதற்கு எந்த தடையும் இல்லை என்றும் கூறினார். ராகுல் காந்திக்கு தண்டனை விதிக்கப்பட்டபோது உடனடியாக தகுதியிழப்பு குறித்த நோட்டீஸை கொடுத்த மக்களவை செயலகம், இப்போது அதனை திரும்பப்பெறுவதிலும் உடனடியாக செயல்படும் என நம்புவதாகும் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


எதிர்கட்சிகள் கொண்டுவந்திருக்கும் பிரதமர் மோடி மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான விவாதம் திங்கட்கிழமை நடைபெறும் நிலையில், அதில் ராகுல்காந்தி பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி பங்கேற்கும்பட்சத்தில் அவர் பிரதமர் மோடியை நோக்கி மீண்டும் சரமாரியான கேள்விகளை எழுப்புவார் என யூகிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை அதாவது பிப்ரவரி 6, 2023 ஆம் தேதி மக்களவையில் பேசிய ராகுல்காந்தி அதானி விவகாரம் குறித்து சரமாரியாக கேள்விகளை எழுப்பினார். அதானியின் சொத்துமதிப்பு குறித்தும், ஷெல் கம்பெனிகள் குறித்தும் பேசிய அவர், அக்னிவீர் திட்டத்தையும் ஆர்எஸ்எஸ் திட்டம் என கடுமையாக சாடினார்.


இம்முறை நாடாளுமன்றம் சென்றால் மீண்டும் அதானி விவகாரம் மற்றும் மணிப்பூர் பிரச்சனை, விலைவாசி ஏற்றம் குறித்து பல்வேறு கேள்விகளை ராகுல்காந்தி எழுப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பெட்ரோல் டீசல் விலையேற்றம் குறித்து கேள்விகளை முன்வைக்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளனர். 


மேலும் படிக்க | ஓட்டல் அறையில் ரகசிய கேமரா... அந்தரங்க வீடியோ எடுத்து மிரட்டிய மர்மக்குரல்: சிக்கியது எப்படி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ