இன்று ராகுல் ஸ்ரீநகருக்குச் செல்கிறார்; வர வேண்டாம் என எச்சரிக்கும் நிர்வாகம்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி காஷ்மீருக்கு விஜயம் செய்ய முன்வந்ததை ஆளுநர் சத்ய பால் மாலிக் ஏற்றுக்கொண்டார். இன்று காஷ்மீருக்கு ஒன்பது எதிர்க்கட்சி தலைவர்களுடன் சென்று நிலைமையை பார்க்க உள்ளார்.
புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று (சனிக்கிழமை) ஸ்ரீநகருக்கு செல்லலாம். நமக்கு கிடைத்த ஆதாரங்களின்படி, அவருடன் எதிர்க்கட்சியை சேர்ந்த மேலும் 9 தலைவர்கள் செல்லுவார்கள் எனத் தெரிகிறது. இருப்பினும், அவர்கள் ஸ்ரீநகரை அடைய முடியுமா என்ற சந்தேகம் உள்ளது.
இப்போது ஜம்மு-காஷ்மீர் காவல்துறை எந்த பெரிய தலைவரையும் காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு செல்ல அனுமதிக்கவில்லை. சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் எம்.பி.யும், மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவருமான குலாம் நபி ஆசாத் ஜம்மு சென்றார். ஆனால் ஸ்ரீநகருக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. அவர் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டு, மீண்டும் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
ராகுல் காந்தி காஷ்மீர் செல்ல இருப்பதாக தகவல் வெளியான நிலையில், ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் தரப்பில் "அனைத்து தலைவர்களும் இப்போதே ஸ்ரீநகருக்கு வருவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர்கள் இங்கு வந்தால், அதன்மூலம் சில பிரச்சினைகள் ஏற்ப்படலாம். பல பகுதிகளில் இன்னும் சில கட்டுப்பாடுகள் உள்ளன. எனவே விஜயத்தை தவிர்க்குமாறு கூறியுள்ளது.
காங்கிரஸ் உள்ளிட்ட பிற எதிர்க்கட்சிகள் தொடர்ந்து காஷ்மீர் வருகை கோருகின்றன. ஆனால் நிர்வாகம் அவர்களை இப்போது வரை அனுமதிக்கவில்லை. இதற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியே எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் காவலில் வைக்கப்பட்டு உள்ள ஒமர் அப்துல்லா, பாரூக் அப்துல்லா, மெஹபூபா முப்தி ஆகியோரை விடுவிக்க எதிர்க்கட்சித் தலைவர்கள் கோருகின்றனர்.
ஒருவேளை ராகுல் காந்தி காஷ்மீர் சென்றால், அவருடன் யாரெல்லாம் செல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றால், ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத், சீதாராம் யெச்சூரி, டி ராஜா, மனோஜ் ஜா மற்றும் திமுக மற்றும் சமாஜ்வாடி கட்சி தலைவர்களும் இருப்பார்கள் எனக் கூறப்படுகிறது.
ஏற்கனவே ஜம்மு-காஷ்மீரில் வருகை தொடர்பான பிரச்சினையில் ராகுல் காந்தி மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் இடையே நீண்ட ட்விட்டர் போர் நடந்துள்ளது. உண்மையில், ராகுல் காந்தி காஷ்மீர் செல்ல விருப்பம் தெரிவித்திருந்தார். அதற்கு கவர்னர் மாலிக், நீங்கள் எப்போது காஷ்மீர் செல்ல விரும்பும் உள்ளதோ, அப்பொழுது உங்களுக்காக ஹெலிகாப்டர் அனுப்பப்படும் எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.