அனைத்துலக வன்முறையற்ற நாளில் பாஜக விவசாயிகளை கொடூரமான முறையில் தாக்கியுள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விவசாயக் கடன் தள்ளுபடி, கரும்பு நிலுவைத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை முன்வத்து 70000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உத்தரகாண்டில் இருந்து டெல்லி ராஜ்காட் நோக்கி பிரம்மாண்டப் பேரணி நடத்தி வருகின்றனர். உத்தரகாண்டில் இருந்து ஏராளமான வாகனங்களில் புறப்பட்ட விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி நோக்கி விரைந்தனர். பெரும் திரளாக வந்த விவசாயிகளை உத்தரபிரதேசம் - டெல்லி எல்லை பகுதியில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.


இதனால் வாகனங்களில் இருந்து விவசாயிகள் இறங்கி பேரணியாக டெல்லியை நோக்கி முன்னேறினர். தடுப்புகளை ஏற்படுத்தி காவல்துறையினர் விவசாயிகளை தடுக்க முயற்சித்தனர், எனினும் தடுப்புகளை மீறி விவசாயிகள் முன்நோக்கி பயணத்தை தொடர்ந்தனர். எனவே காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் அவர்களை கலைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டனர்.


இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் முன்வைத்தனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். 


அனைத்துலக வன்முறையற்ற நாளில் பாஜக விவசாயிகளை கொடூரமான முறையில் தாக்கியுள்ளது. என அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது... 



“அனைத்துலக வன்முறையற்ற நாளில், டெல்லிக்கு அமைதியான முறையில் வந்த விவசாயிகளை கொடூரமாக தாக்கி பாஜக-வினர் காந்தி ஜெயந்தியை கொண்டாடுகின்றனர். இப்போது தங்களுடைய குறையை தெரிவிக்க விவசாயிகள் கூட டெல்லிக்கு வரமுடியாது,” என குறிப்பிட்டுள்ளார்.