பார்லிமென்டை முடக்க ராகுல் சிந்தனை- அருண் ஜெட்லி
பார்லிமென்டின் அடுத்த தொடரை எப்படி முடக்கலாம் என ராகுல் சிந்தித்து வருவதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
புதுடெல்லி: பார்லிமென்டின் அடுத்த தொடரை எப்படி முடக்கலாம் என ராகுல் சிந்தித்து வருவதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
ஜி.எஸ்.டி., வரி இந்தாண்டு அமல்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. மறைமுக வரி நிர்வாகத்தில் சிறந்த வழி ஏற்படுத்தும். வெளிநாட்டில் சட்டவிரோதமாக வாங்கப்படும் நிலங்கள் தொடர்பான விபரங்களை வெளியிட்டால், அதற்கு 60 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் வகையிலும், 10 வருட சிறை தண்டனை வழங்கப்படும் வகையிலும் கறுப்பு பண சட்டம் திருத்தப்பட்டுள்ளது.
அடுத்த தலைமுறையினரை பற்றி பிரதமர் சிந்திக்கும் நிலையில், பார்லிமென்டின் அடுத்த தொடரை எப்படி முடக்குவது என ராகுல் சிந்தித்து வருகிறார்.
ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் அறிவிக்கப்பட்டதால் வேதனை ஏற்பட்டது. குறுகிய கால விமர்சனங்களும், இடையூறு மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. ரூபாய் நோட்டு வாபஸ் பெறப்பட்டதால், பயங்கரவாதம் மற்றும் குற்றச்செயல்கள் குறைந்ததுடன், அவர்களுக்கு பின்னடைவு ஏற்பட்டது.
ரூபாய் நோட்டு வாபஸ் சீர்திருத்தங்களை பாதித்தது. வேதனை மற்றும் இடையூறுக்கான காலம் முடிந்து விட்டது. பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் புத்துயிர் பெற துவங்கியுள்ளது.
வங்கிகளில் வரிசையில் இருந்த கூட்டம் காணாமல் போய் விட்டது. புதிய நோட்டுகள் மறுசுழற்சி தற்போது நடைபெற்று வருகிறது. வங்கிகளில் அதிக பணம் வந்துள்ளதால், வட்டி விகிதங்கள் குறையும் என அருண் ஜெட்லி கூறினார்.