பார்லிமென்டில் விவாதம் நடந்த போது தூங்கிய ராகுல்
குஜராத்தில் மாட்டுத்தோல் கடத்தியதாக தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த சிலர் கடுமையாக தாக்கப்பட்டனர். இந்த சம்பவம் பார்லிமென்டில் கடுமையாக எதிரொலித்தது. காங்கிரஸ் இந்த பிரச்னையை எழுப்பி அமளியில் ஈடுபட்டதால், ராஜ்யசபா அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது.
இதனையடுத்து தாக்குதல் சம்பவம் குறித்து விவாதம் நடந்தது. அப்போது, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் தூங்கிய காட்சி வெளியாகியுள்ளது. இந்த விவாதத்திற்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிலளித்து கொண்டிருந்தார். இதனை ஏற்க மறுத்து காங்கிரஸ் எம்.பி-க்கள் கோஷம் எழுப்பி கொண்டிருந்தனர். இவ்வளவு சத்தத்திற்கு நடுவிலும் ராகுல் காந்தி மெய்மறந்து தூங்கி கொண்டிருந்த காட்சி வெளியாகியுள்ளது.