காங்கிரஸ் மூத்த தலைவர் ரஜீந்தர் குமார் தவான் அவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லியில் உள்ள பி.எல். கபுர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மத்திய மந்திரி மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர் ரஜீந்தர் குமார் தவான், நேற்று இரவு 7 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 81 ஆகும். 


இவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நெருங்கிய உதவியாளராக இருந்தவர். 1962 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டு இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட நாள் அவருக்கு தனிப்பட்ட உதவியாளராக மிகவும் நெருக்கமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


வயது முதிர்வு காரணமாக கடந்த வாரம் செவ்வாய்கிழமை மருத்துவமனையில் இவர் அனுமதிக்கப்பட்டார். பின்னர் நேற்று இரவு 7 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது



முன்னதாக "காங்கிரசஸ் கட்சியின் மதிப்புமிக்க உறுப்பினரான ஆர்.கே. தவான் மறைவுக்கு நாங்கள் கவலைப்படுகிறோம். அவரது குடும்பத்திற்கு எங்கள் பிரார்த்தனை இருக்கும்" என்று காங்கிரஸ் சார்பில் இறங்கல் தெரிவிக்கப்பட்டது.


இந்நிலையில் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மூத்த தலைவர் அசோக் கெலாட் ஆகியோர் தவான் அவர்கள் இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.