புல்வாமா போன்ற தாக்குதல்கள் எல்லா நேரத்திலும் நடக்கிறது, அதற்காக பாகிஸ்தானை குற்றம் கூறுவது தவறு என ராகுல் காந்தியின் உதவியாளரான சாம் பிட்ரோடா தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒருசில தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள் என்பதற்காக ஒட்டுமொத்த பாகிஸ்தானையும் தண்டிப்பது ஞாயமானதா? என்று காங்கிரஸ் கட்சியின் அயலகப் பிரிவுத் தலைவர் சாம் ஃபிட்ராடோ தெரிவித்துள்ளார். இவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.


பாகிஸ்தானின் பாலாகோட்டில் நுழைந்து தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படை அழித்தது குறித்ததும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மும்பையில் கடந்த 2008 ஆம் ஆண்டில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை நியாயப்படுத்தும் விதமாகவும் அவர் பேசியுள்ளார். சாம் ஃபிட்ராடோ கூறியுள்ளதாவது: பாலாகோட்டில் 300 பேரை இந்திய விமானப்படை கொன்றது என்கிறார்கள். எல்லாம் சரிதான். அதுதொடர்பான ஆதாரங்களை வெளியிட வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன். இதுதொடர்பாக வந்து ஆய்வுக் கட்டுரைகள் அனைத்தும் போலியானவை.



மும்பையில் என்ன நடந்தது? 8 பேர் வந்து எதையோ செய்தார்கள். அதற்காக ஒட்டுமொத்த பாகிஸ்தானையும் குற்றம்சாட்ட முடியுமா?. யாரோ சிலர் வந்து தாக்குதல் நடத்தினார்கள் என்பதற்காக, அந்த நாட்டில் உள்ள ஒவ்வொருவரையும் குற்றம்சாட்டுவது நகைப்புக்குரியது. நாங்கள் நினைத்திருந்தால், அப்போது போர் விமானங்களை கொண்டு போய் தாக்குதல் நடத்திவிட்டு வந்திருக்கலாம்.


ஆனால், அது சரியான நடவடிக்கையாக இருக்குமா? உலகை நீங்கள் இப்படி கையாளக் கூடாது என்றார் அவர்.