அமேதியில் போட்டியிட்டால் தோற்றுவிடுவோம் என்ற அச்சத்தின் காரணமாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவிற்கு தப்பியோடிவிட்டதாக, பா.ஜ.க தலைவர் அமித் ஷா விமர்சனம்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 18 வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் தங்களின் ஆட்சியை கைப்பற்ற அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர பிரச்சரம் செய்து வருகிறது. இந்நிலையில், அமேதியில் போட்டியிட்டால் தோற்றுவிடுவோம் என்ற அச்சத்தின் காரணமாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவிற்கு தப்பியோடிவிட்டதாக, பா.ஜ.க தலைவர் அமித் ஷா விமர்சனம் செய்துள்ளார். 


தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரசாரின் வேண்டுகோளை ஏற்று, அமேதி மட்டுமின்றி, கேரள மாநிலம் வயநாடு தொகுதியில், ராகுல் காந்தி போட்டியிடுகிறார். இந்நிலையில், வருகிற 11 ஆம் தேதி முதற்கட்ட தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் மேற்கு உத்திரப்பிரதேசத்தின் பிஜ்நார் பகுதியில், பரப்புரை மேற்கொண்ட பாஜக தலைவர் அமித் ஷா, அமேதியில், கடந்த ஐந்தாண்டுகளில் என்ன திட்டங்களை முன்னெடுத்தீர்கள் என வாக்காளர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பி ராகுலைத் திணறடிப்பார்கள் என்றார்.



இதற்கு பயந்தே, கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்கு, ராகுல் காந்தி தப்பியோடுவதாக அமித்ஷா கூறியிருக்கிறார்.