குஜராத்தின் கிர்-சோம்நாத் மாவட்டத்தில் உள்ள உனா என்ற இடத்தில் இறந்த பசு ஒன்றின் தோலை உரித்ததாக தலித் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த பயங்கர தாக்குதலை கண்டித்து நேற்று குஜராத்தின் சவுராஷ்டிரா என்ற பகுதியில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முழு அடைப்பையொட்டி ஏராளான தலித் பிரிவினர் சாலைகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். அப்போது ஏராளமான தனியார் மற்றும் அரசு பஸ்கள் கல்வீசி சேதப்படுத் தப்பட்டன. போர்பந்தர் அருகே ஒரு பஸ்சுக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல இடங்களில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.


இந்நிலையில் காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ராகுல் காந்தி பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் தேவையான அனைத்து உதவிகளையும் தன் கட்சி செய்யும் என்று உறுதி அளித்தார். காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி வருகையால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.