காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், விவசாயத்துக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி, உன்னா ஆகிய பகுதிகளில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி., காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயத்திற்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளார். அமாவது ஒரு பொது பட்ஜெட்டும், ஒரு விவசாய பட்ஜெட்டும் தாக்கல் செய்வோம்.


தற்போது, ரூ.20 ஆயிரம் வங்கிக்கடனை திரும்ப செலுத்த தவறினால் கூட விவசாயிகளை சிறைக்குள் தள்ளுகிறார்கள். விவசாய பட்ஜெட், இந்த அராஜகங்களுக்கு முடிவு கட்டும். விவசாயிகள் கவுரவமான முறையில் வாழலாம்.


அதுபோல், 5 கோடி குடும்பங்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.72 ஆயிரம் நிதி உதவி வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளோம். என்ன விலை கொடுத்தாவது அதை நிறைவேற்றுவோம் எனவும் தெரிவித்தார்.


பிரதமர் மோடி ரூ.15 லட்சம் தருவேன் என்று கூறி ஏழைகளை ஏமாற்றி விட்டதாக குறிப்பிட்ட அவர், மோடி அறிவித்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை, நாட்டை பெரிதும் பாதித்துள்ளது. வேலைவாய்ப்பு குறைந்து விட்டது. இதனால், ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு வழங்குவோம் என்ற வாக்குறுதி வெறும் பேச்சு என்றாகி விட்டது எனவும் தெரிவித்தார்.


காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், முதல் 3 ஆண்டுகளுக்கு வியாபாரிகள் எந்த அலுவலகத்துக்கும் செல்ல வேண்டி தேவை இருக்காது. நாட்டில் நிலைமை வேகமாக மாறி வருகிறது. “காவலாளி ஒரு திருடன்” என்று குஜராத் மக்கள் கூட கூறத்தொடங்கி விட்டனர் என பிரதமர் மோடியை கடுமையாக சாடினார்.