உத்தரப்பிரதேச தேர்தல்  அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளதால், காங்கிரஸ், பா.ஜ.க, சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் அம்மாநிலம் முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர். ராகுல்காந்தி (Rahul Gandhi) தன்னுடைய முன்னாள் நாடாளுமன்ற தொகுதியான அமேதியில் மிகப்பெரிய பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | இயற்கை விவசாயத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்: பிரதமர் மோடி


அப்போது பேசிய அவர், பிரதமர் மோடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததுடன், சில கேள்விகளையும் எழுப்பினார். பண மதிப்பிழப்பு, தவறான முறையில் ஜி.எஸ்.டியை நடைமுறைப்படுத்தியது மற்றும் கொரோனா பேரிடரை தவறான முறையில் கையாண்டது உள்ளிட்ட காரணங்களால் நாட்டு மக்கள் மிகப்பெரிய இன்னல்களுக்குள்ளாகியிருப்பதாக தெரிவித்தார். நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்திருப்பதாக தெரிவித்த ராகுல்காந்தி, பணம் வீக்கம் மற்றும் வேலையில்லா திண்டாட்டம் குறித்து பிரதமர் மோடி மற்றும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் வாய் திறக்கமாட்டார்கள் என சாடினார்.


ஏனென்றால் அவர்களிடம் இதற்கான பதில் இல்லை என தெரிவித்த ராகுல்காந்தி, மத்திய பா.ஜ.க அரசின் தவறான திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளால் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள் மிகப்பெரிய பாதிப்புகளை சந்தித்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். கங்கையில் மூழ்கும் மோடி, மக்களிடம் இருக்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுக்கிறார் எனவும் அவர் குற்றம்சாட்டினார். இதனையடுத்து, ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் அமேதியில் ‘ஜன் ஜாக்ரான் அபியான்’ என்ற பெயரில் ஊர்வலம் சென்றனர். முன்னதாக, இன்று காலை பிரதமர் மோடி ஷாஜஹான்பூரில் 594 கிலோ மீட்டர் தொலைவிலான நெடுஞ்சாலைக்கு அடிக்கல்நாட்டி உரையாற்றினார்.


ALSO READ | Big Statement: எங்கள் முடிவில் சில தவறுகள் இருக்கலாம்! தளுதளுக்கும் அமித் ஷா


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR