புதுடெல்லி: இயற்கை விவசாயத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை (டிசம்பர் 16) கூறினார். மேலும், விவசாயத்தில் புரட்சியை ஏற்படுத்த நிலையான மற்றும் சுற்றுச் சூழலுக்கு உகந்த இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க அனைத்து மாநில அரசுகளும் முன்வர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
விவசாயம் மற்றும் உணவு பதப்படுத்துதல் தொடர்பான தேசிய மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றுகையில், “இன்று, சில விவசாயிகள் இரசாயனங்கள் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாது என்று நம்புகிறார்கள், ஆனால் இது முற்றிலும் தவறானது. இயற்கை விவசாயத்தின் பழங்கால மரபுகளை நாம் கற்றுக்கொள்ள வேண்டும், அங்கு நாம் இயற்கையுடன் இணைந்து இருந்தோம்" என்றார் பிரதமர் நரேந்திர மோடி (PM Modi).
மேலும், “இந்தியாவில் இரண்டு ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்திருக்கும் 80 சதவீத சிறு விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் அதிகப் பலன்களைத் தரும். ரசாயன உரங்களுக்கு செலவிடும் பணத்தைக் குறைத்து இயற்கை விவசாயத்துக்குத் திரும்பினால் இந்த விவசாயிகளின் நிலைமை வெகுவாக மேம்படும்” என்றார்.
ALSO READ | பெண்களின் திருமண வயதில் மாற்றம்! அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும் சட்டம் விரைவில்
விவசாயிகள் ‘பயிர் கழிவுகளை’ செயல்முறையை கை விட வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். “விவசாய நுட்பங்களில் உள்ள தவறுகளையும் நாம் அகற்ற வேண்டும். பயிர் கழிவுகளை எரிப்பதால் நிலத்தின் வளம் குறைகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்” என்றார்
"21ஆம் நூற்றாண்டில், உலகை இந்தியா வழிநடத்தப் போகிறது, இந்திய விவசாயிகள்தான் வழிநடத்தப் போகிறோம். நமது சுதந்திர தினத்தின் 100வது ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தின் போது , இயற்கை விவசாயத்தின் மூலம் இயற்கையுடன் இணைந்து, உணவுப் பாதுகாப்பிற்கான சிறந்த தீர்வை உலகிற்கு இந்தியா வழங்கும்" என்று மோடி கூறினார்.
இயற்கை மற்றும் ஜீரோ பட்ஜெட் விவசாயம் குறித்த மூன்று நாள் உச்சி மாநாடு டிசம்பர் 14 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 16 ஆம் தேதி நிறைவடைகிறது.
ALSO READ | Aadhaar - Voter ID Link: தேர்தல் சீர்திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR