ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு பதவி விலகுவதாக அறிவிதிருந்த நிலையில்  ரயில்வே வாரியத்தின் புதிய தலைவராக அஸ்வனி லோகானி நியமிக்கப்பட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்திரபிரதேசத்தில் சமீபத்தில் நடந்த ரயில் விபத்துக்கள் ஏற்பட்டு பலர் உயிரிழந்தனர். காயம் அடைத்துள்ளனர். அதற்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு பதவி விலகுவதாக அறிவித்தார். ஆயினும், பிரதம நரேந்திர மோடி, "அவரை காத்திருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு உள்ளார்.


இரயில்வே துறை பதவியை ராஜினாமா செய்ய மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு முடிவு செய்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறியதாவது:-


கடந்த 3 ஆண்டுகளாக ரயில்வே அமைச்சராக இருந்து வரும் நான் ரயில்வே துறையை மேம்படுத்துவதற்காக எனது ரத்தம், வியர்வையை அர்ப்பணித்துள்ளேன். பிரதமர் மோடியின் புதிய இந்தியா திட்டத்தின்படி ரயில்வேயின் தரத்தை உயர்த்த பல்வேறு புதிய திட்டங்களை கொண்டு வந்து செயல் படுத்தி உள்ளோம்.


ஆனால் சமீபகாலமாக ரயில்வேயில் விபத்துக்கள் நடந்ததால் பல பயணிகள் உயிரிழந்துள்ளனர், மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இதனால் நான் மிகுந்த வருத்தம் அடைந்துள்ளேன். அது எனக்கு ஆழ்ந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.


இதற்கு முழு பொறுப்பேற்று எனது பதவியை ராஜினாமா செய்துள்ளேன். இதற்கான ராஜினாமா கடிதத்தை பிரதமர் மோடியிடம் அளிக்க உள்ளேன். ஆனால் அவர் என்னை காத்திருக்கும் படி கூறியுள்ளார் என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.