புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் ரயில் மரணங்கள்.. இதுவரை 80 பேர் பலி
ரயில்வே பாதுகாப்பு படையின் தரவுகளின்படி, மே 9 முதல் மே 27 வரை புலம் பெயர்ந்த தொழிலார்களுக்கான சிறப்பு ரயில்களில் பயணம் செய்த போது கிட்டத்தட்ட 80 பேர் உயிரிழந்துள்ளனர்.
புது டெல்லி: இந்த ரயில்கள் மே 1 ஆம் தேதி முதல் இயங்கி வருகின்றன. மே 27 வரை 3,840 முறை இயக்கப்பட்டுள்ளன. சுமார் ஐந்து லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பினர். புதன்கிழமையன்று வெளியான ஒரு அறிக்கை என்ன கூறுகிறது என்றால், இந்த ரயிலில் பயணம் செய்த ஒன்பது பேர் இறந்ததாக செய்திகள் வெளியாகின.
ஆனால் இறந்தவர்களில் பெரும்பாலானோர் "நீண்ட நாள் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள்" என்று ரயில்வே அமைச்சகம் தெளிவுபடுத்தி இருந்தது. அவர்களில் பலர் உண்மையில் மருத்துவ சிகிச்சைக்காக நகரங்களில் இருந்தனர். மேலும் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்ட பின்னரே, அவர்களால் ஊர் திரும்ப முடிந்தது. சோர்வு, வெப்பம் மற்றும் பசியால் பயணிகள் இறந்ததாகக் கூறப்படும் குற்றசாட்டுக்களுக் இந்த பதில் மூலம் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதிக இறப்பு விவரங்கள் வெளிவருவது இதுவே முதல் முறை. ஒரு RPF அதிகாரி இறப்பு எண்ணிக்கையை உறுதிப்படுத்தினார். ஒரு ஆரம்ப பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது என்றும் மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து தயாரிக்கப்பட்ட இறுதி பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.
ரயில்வே அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளரிடம், 80 இறப்புகள் குறித்து விளக்கம் கேட்கப்பட்டபோது, "ரயில்வே வாரிய தலைவர் பத்திரிகையாளர் சந்திப்பில் இதற்கு பதிலளித்து விட்டார்" என்று கூறினார்.
வெள்ளிக்கிழமை ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய , ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவ் கூறியதாவது, "யாருடைய மரணமும் ஒரு பெரிய இழப்பாகும். யாராவது நோய்வாய்ப்பட்டால் ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டு, அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி, உயிரைக் காப்பாற்றும் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்திய ரயில்வேக்கு இதற்காகவே செயல்படும் ஒரு சிறப்பு கட்டுப்பாட்டு அமைப்பு உள்ளது.
இதுபோன்ற பல பயணிகளுக்கு உதவி செய்யப்பட்டுள்ளது. மேலும் பல பிரசவங்களும் நடந்துள்ளன. இந்த நிலைமைகளில் பயணிக்கும் தொழிலாளர்களின் அவல நிலையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இறப்பு ஏற்பட்டால், உள்ளூர் மண்டலங்கள் அதற்கான காரணத்தை விசாரிக்கின்றன. உணவுப் பற்றாக்குறை இல்லாததால் தான், அவர்கள் பசியால் இறந்ததாக கூறப்படும் மேலெழுந்தவாரியான குற்றச்சாட்டுகளும் உண்டு. சில மரணங்கள் குறித்த, தகவல்களை நாங்கள் விசாரித்து வருகிறோம். விரைவில் இந்த மரணங்கள் குறித்த புள்ளி விவரங்களை வெளியிடுவோம்" என்றார்.
மதிப்பாய்வு செய்த தரவுகளின்படி, கிழக்கு மத்திய ரயில்வே மண்டலம், வட கிழக்கு ரயில்வே மண்டலம், வட ரயில்வே மண்டலம் மற்றும் வட மத்திய ரயில்வே மண்டலம் உள்ளிட்ட பல மண்டலங்களில் இறப்பு மே 9 முதல் மே 27 வரை பதிவாகியுள்ளது. இறந்தவர்களில் வயது 4 முதல் 85-க்கு உட்பட்டவர்களும் அடங்குவர். ஒரு சில நிகழ்வுகளில் இறப்புகளுக்கு காரணமான நோய்கள் அல்லது விபத்துக்கள் குறித்தும் கூட பட்டியலில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மே 1 முதல் மே 8 வரையிலான தரவுகள் கிடைக்கவில்லை.
வடகிழக்கு ரயில்வே மண்டலத்தில் 18 பேரும், வடமத்திய மண்டலத்தில் 19 பேரும், கிழக்கு கடற்கரை ரயில்வே மண்டலத்தில் 13 பேரும் உயிரிழந்துள்ளனர். மொத்த சிறப்பு ரயில்களில் 80% ரயில்கள், உத்தரபிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களுக்கு செல்லக் கூடிய ரயில்களாகும்.
ஒன்பது இறப்புகளின் அறிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் ரயில்வே அமைச்சகம் வெள்ளிக்கிழமை காலை ஒரு அறிக்கை வெளியிட்டது. : "புலம்பெயர்ந்தோர் தங்கள் வீடுகளுக்கு திரும்பிச் செல்வதை உறுதி செய்வதற்காக இந்திய ரயில்வே நாடு முழுவதும் தினசரி ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. இதில் பயணம் செய்யும் சிலருக்கு முன்பே சில நோய் பிரச்னைகள் இருப்பதைக் காணலாம். இது கோவிட் -19 தொற்றுநோய் ஏற்பட்டால், அவர்களின் உடல்நிலை மேலும் மோசமாகிறது. பயணத்தின் போது முன்பே இருக்கும் நோய் சிக்கல்கள் காரணமாக சில துரதிர்ஷ்டவசமானமரணங்கள் நிகழ்ந்துள்ளன.
இந்த ரயில்களில் பயணிகள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளில் வெப்பம், சோர்வு மற்றும் தாகம் ஆகியவை அடங்கும். கடந்த ஒரு மாதத்தில் இதுபோன்ற பல வழக்குகளை நாங்கள் கண்டிருக்கிறோம் என்று ஒரு மண்டல ரயில்வே அதிகாரி கூறினார்.
மொத்தத்தில் நாடு முழுவதும் சிறப்பு ரயில்களில் பயணம் செய்தவர்களில் 80 இறப்பகள் ஏற்பட்டுள்ளன.
தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர், பயணம் செய்யும் ரயில்களில், இந்திய ரயில்வே உணவு மற்றும் தண்ணீரை வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை அன்று இடைக்கால உத்தரவில் பிறப்பித்துள்ளது.
(மொழியாக்கம்: தெய்வ பிந்தியா)