புதுடெல்லி: வரும் நாட்களில் குறிப்பிட்ட ரயில் பயணங்களின் விலை உயரக் கூடும். அரசாங்கம் விரைவில் பயனர் மேம்பாட்டுக் கட்டணத்தை (UDF) அதிகரிக்கப் போகிறது. இந்த அதிகரிப்புக்கு அடுத்த மாதம் அமைச்சரவை ஒப்புதல் அளிக்கக்கூடும். ஆதாரங்களின்படி, இனி பயனர் மேம்பாட்டுக் கட்டணம் ரூ .10 முதல் ரூ .35 வரை இருக்கக்கூடும். வெவ்வேறு வகைகளுக்கு வெவ்வேறு பயனர் கட்டணம் பொருந்தும். UDF தனியார் நிலையங்களிலிருந்து (Private Stations) பயணிக்கும்போது மட்டுமே பயணிகளுக்கு விதிக்கப்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

UDF ஐந்து பிரிவுகளாக செயல்படுத்தப்படலாம் என்று வட்டாரங்கள் கூறுகின்றன.


AC 1 இல் 35-40 ரூபாய்,


AC 2 இல் 30 ரூபாய்,


AC 3 இல் 25-30 ரூபாய் மற்றும்


Sleeper Class-ல் 10 ரூபாய் என கட்டணம் வசூலிக்கப்படும்.


ALSO READ: அனகொண்டா ஸ்டைலில் ரயில்.... அமர்க்களப்படுத்திய இந்தியன் ரயில்வே


நாட்டின் பெரிய ரயில் நிலையங்களை (Railway Stations) நவீன மற்றும் உலகத் தரம் வாய்ந்ததாக மாற்ற பிபிபி மாதிரியில் அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. இதன் கீழ், ரயில் நிலைய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒரு தனியார் நிறுவனத்திற்கு நிலையம் ஒதுக்கப்படும். அதன் பிறகு நவீன மற்றும் அனைத்து பயணிகள் வசதிகளுடன் இந்த நிலையம் நவீன முறையில் மேம்படுத்தப்படும். இதற்கு பதிலாக, பல்வேறு விதங்களில் தனியார் நிறுவனம் பணம் ஈட்ட ரயில்வே வழி வகுத்துக் கொடுக்கும். இதில் பயனர் மேம்பாட்டுக் கட்டணங்களும் அடங்கும்.


புது தில்லி, மும்பை சிஎஸ்டி, ஜெய்ப்பூர், நாக்பூர், அகமதாபாத், ஹபீப்கஞ்ச், சென்னை, அமிர்தசரஸ் போன்ற பல நிலையங்களை இந்த பட்டியலில் அரசு சேர்த்துள்ளது. நீங்கள் இந்த ரயில் நிலையங்களிலிருந்து பயணம் மேற்கொண்டால், அப்போது நீங்களும் UDF செலுத்த வேண்டும். கடந்த ஆண்டு நவம்பர் 6 ஆம் தேதி தனியார் நிலையங்களுக்கு RFQ-களை அரசாங்கம் கோரியிருந்தது. 


ALSO READ: உலகின் முதல் சிறப்பு சுரங்கப்பாதையை உருவாக்கிய இந்தியன் ரயில்வே..


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR