நாடு முழுவதும் மொத்தம் 5,500 ரயில் நிலையங்களில் WiFi வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 2016-ம் ஆண்டு டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் இலவச வைபை வசதி ஏற்படுத்தப்பட்டது. அந்த வகையில் தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள மகுவாமிலன் ரயில் நிலையம் 5,500வது WiFi நிலையமாக மாற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.


இந்நிலையில் இது குறித்து ரயில்டெல் அமைப்பின் தலைமை அதிகாரி புனீத் சாவ்லா கூறியதாவது:-


அனைத்து ரயில் நிலையங்களும் வைஃபை பெறவேண்டும் என்பதே நோக்கம். இதற்காக கூகுள், டாடா டிரஸ்ட், பிஜிசிஐஎல் உள்ளிட்ட நிறுவனங்களுடன் பேசி வருகிறோம் என்று அவர் தெரிவித்தார்.