ரயில்வேயின் கோடைகால சிறப்பு திட்டம் - 3 நாட்களுக்கு முன்பே தொடக்கம்
பயணிகளின் எணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் கோடைக்கால சிறப்புத் திட்டத்தை ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தியுள்ளது.
கொரோனா பரவலுக்குப் பிறகு நாடு முழுவதும் இயல்பு நிலை திரும்பியுள்ளது. பொதுப் போக்குவரத்துகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, மக்கள் முழுமையாக பயணிக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, நாடு முழுவதும் ரயில் பயணங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ரயிலில் பயணிகள் வருகையை அதிகரிக்கும் நோக்கில் ரயில்வே சிறப்பு திட்டங்களை முன்னெடுத்துள்ளது.
கொரோனாவுக்கு முன்பு இருந்த பயணிகளின் கூட்டம்போல் மீண்டும் ரயிலில் பயணிகள் வருகை அதிகம் இருக்க வேண்டும் என்பதற்காக சிறப்புத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அந்தவகையில் 96 நாட்கள் கோடைகால சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
ஏப்ரல் மாத பயணம்
சிறப்பு ரயில்களின் பயணம் ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்பட உள்ளது. இதனையொட்டி இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு ஐஆர்சிடிசி இணையதளத்தில் மார்ச் 19 முதல் தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய ஐஆர்சிடிசி அதிகாரிகள், கோடைகால சிறப்பு ரயில்கள் 96 நாட்களுக்கு இயக்கப்பட இருக்கின்றன. இதற்கான முன்பதிவு 3 நாட்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது எனத் தெரிவித்தனர்.
மேலும் படிக்க | ஏப்ரல் மாதத்தில் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை
எங்கு முன்பதிவு செய்வது?
IRCTC இன் அதிகாரப்பூர்வ இணையதளமான www.irctc.co.inல் இருந்து பயணிகள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். கோடைகாலத்தில் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தால், நாடு முழுவதும் இயக்கப்படும் சிறப்பு ரயில்களையும், அதன் நேரத்தையும் அறிந்து உங்களுக்கான டிக்கெட்டை புக் செய்யுங்கள். முன்பதிவு செய்யும்பட்சத்தில் பயணம் நிறைவாக இருக்கும்.
வழிகாட்டு நெறிமுறைகள்
பயண விதிகள் குறித்து தகவல் அளித்த ரயில்வே அதிகாரி ஒருவர், நீண்ட தூரம் பயணம் செய்யும் போது, கோவிட் வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இது உங்களுக்கும் சக பயணிகளுக்கும் பாதுகாப்பாக இருக்கும். புனே-ஜெய்பூர்/கர்மாலி, மும்பை-ஷாலிமர், அகமதாபாத்-டானாபூர், பாந்த்ரா டெர்மினஸ்- நிஜாமுதீன், ஹவுரா-பத்ரக், ஜெய்ப்பூர்-ஹைதராபாத், பன்வெல்-பிரயாக்ராஜ் மற்றும் பல வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன” எனக் கூறினார்.
மேலும் படிக்க | 31 மார்ச் 2022-க்குள் இந்த பணிகளை செய்து முடிக்கவும்: இல்லையென்றால் பெரும் பிரச்சனை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR