பீகார் மழையால் 16,56607 பேர் பாதிப்பு; 42 பேர் உயிரிழப்பு; தொடரும் மீட்பு நடவடிக்கை..
பீகாரில் பெய்து வந்த மழை நின்ற பின்பும், சாலைகளில் தேங்கி உள்ள நீரை வெளியேற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதேவேளையில் தொடர்ந்து மீட்பு நடவடிக்கை நடைபெற்று வருகிறது.
பாட்னா: தொடர்ந்து நான்கு நாட்கள் பெய்த கனமழைக்கு பின்னர், பீகாரில் (Bihar) மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஆனால் சாலைகளில் தேங்கி உள்ள நீரை வெளியேற்றுவதில் இன்னும் சிக்கல் நீடிக்கிறது. பீகார் மாநிலத்தில் பெய்த மழையால் இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர்.
மழை பெய்வது நின்று ஒரு நாள் ஆனாநிலையிலும், இன்றும் பாட்னாவில் ராஜேந்திர நகர், கங்கர்பாக், பூத்நாத் சாலை, காந்தி தொழிற்சாலை சாலை, மலாஹி பக்தி, எஸ்.கே.புரி ஆகிய இடங்களில் அதிக அளவில் வெள்ளம் போல நீர் தேங்கி உள்ளது. சாலைகளில் உள்ள நீரின் காரணமாக மக்கள் தானாபூர் மற்றும் கோலா சாலையில் உள்ள மக்கள் வெளியேற முடியாமல் அடைக்கப்பட்டுள்ளனர்.
அதே நேரத்தில், கதிஹாரில் உள்ள மகேஷ்பூர் கோஷி அணை உடைந்துள்ளது கோசி ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்ததால் அணை உடைந்துள்ளது. இதனால் சுமார் 7 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் இரண்டு டஜன் மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. சிவார், சீதாமாரி, முசாபர்பூர், கிழக்கு சம்பரன், மேற்கு சம்பரன், தர்பங்கா, மதுபானி, சமஸ்திபூர், பெகுசராய், ககாரியா, முங்கர், பாகல்பூர், கதிஹார், பூர்னியா, அரேரியா, கிஷாங்கன்ஜ், சுபால், சஹால், மாட் போன்ற மாவட்டங்கள் அதிக அளவில் பாதிப்படைந்துள்ளது.
பாட்னாவில் வசித்து வந்த மாநில துணை முதல்வர் சுஷில் குமார் மோடி வெள்ளப்பெருக்கத்தில் சிக்கியதால் என்.டி.ஆர்.எஃப் குழு அவரை மீட்டனர். இதற்கிடையில், பாஜகவின் கிரிராஜ் சிங் உட்பட பல தலைவர்கள் மறைமுகமாக முதல்வர் நிதீஷ் குமார் விமர்சித்துள்ளனர்.
பீகாரில், இந்த மழையின் காரணமாக 95 தொகுதி 464 பஞ்சாயத்து 758 கிராமங்களை 16,56607 மக்களை பாதித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு 17 நிவாரண முகாம்கள் 226 சமூக சமையலறைகள் அமைக்கப்பட்டுள்ளன. 35 படகுகள் 18 என்.டி.ஆர்.எஃப் குழுக்கள் நிவாரணப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.