புதுடெல்லி: டெல்லியில் இன்று {சனிக்கிழமை (ஜூன் 20) } அதிகாலை பலத்த மழை பெய்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆதர்ஷ் நகர், ரோகிணி, ராஜ்பத், மண்டி ஹவுஸ் போன்ற பகுதிகளில் இன்று பலத்த மழை பெய்தது. அதேசமயம் நொய்டாவின் சில பகுதிகளில் மிதமான கனமழை பெய்தது. கனமழை காரணமாக தேசிய தலைநகரில் மண்டி ஹவுஸ் உட்பட பல பகுதிகள் நீர் தேங்கியுள்ளன.


 


READ | அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு; 50 டிகிரி செல்சியஸை கடந்தது


 


முன்னதாக, டெல்லி என்.சி.ஆரின் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் 30-50 கி.மீ வேகத்தில் மழை மற்றும் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.


"அடுத்த 2 மணி நேரத்தில் ஹிசார், ஹன்சி, ஜிந்த், மெஹாம், பிவானி, ரோஹ்தக், முழு டெல்லி மற்றும் அருகிலுள்ள என்.சி.ஆரின் பகுதிகளில் 30-50 கி.மீ வேகத்தில் மழை மற்றும் கடுமையான காற்று வீசும்" என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.


டெல்லியின் பிற பகுதிகளில் ஜூன் 22-23 தேதிகளில் மழை செயல்பாடு தீவிரமடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி தெரிவித்துள்ளது. மே 25 ஆம் தேதி பருவமழை தலைநகரைத் தாக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது, 


"தென்மேற்கு பருவமழை ஜூன் 21 வரை மேலும் முன்னேற வாய்ப்பில்லை, இருப்பினும், ஜூன் 25 இல் டெல்லி மற்றும் ஹரியானாவில் அதன் முன்னேற்றத்திற்கு நிலைமைகள் சாதகமாக மாறக்கூடும், " என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி வெள்ளிக்கிழமை கூறியிருந்தது.