2024 நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க அனைத்துக் கட்சிகளும் இப்போதிலிருந்தே தயாராகி வருகின்றன. பாஜக தங்களுக்கான வியூகங்களை வகுத்து வரும் நிலையில், எதிர்க்கட்சிகளும் மறுபுறத்தில் தயாராகி வருகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் இல்லாமல் இருப்பது அக்கட்சிக்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்ததை அடுத்து, ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து விலகினார். அதன் பின்னர் சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராகச் செயல்பட்டு வருகிறார்.


தலைவர் பதவியை ஏற்க மறுக்கும் ராகுல் காந்தி


அசோக் கெலாட் உட்பட பல காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மீண்டும் கட்சித் தலைமையை ஏற்க வேண்டுமென வெளிப்படையாகவே கூறி வருகின்றனர். ஆனால்,எந்தப் பதவியிலும் தனக்கு ஆர்வம் இல்லை என்றும், கட்சிக்காக மட்டுமே உழைக்க விரும்புவதாகவும், ராகுல் காந்தி தனது முடிவில் பிடிவாதமாக உள்ளார். ராகுலைப்போலவே பிரியங்கா காந்தியும் காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க விரும்பவில்லை என தகவல்கள் வெளியாக உள்ளன. உட்கட்சித் தேர்தல் குறித்து காங்கிரஸ் காரியக் கமிட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை கூடவுள்ள நிலையில்,  மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் சோனியா காந்தியுடன், ராகுல், பிரியங்கா உடன் செல்லவுள்ளனர்.


காங். தலைவராகிறாரா அசோக் கெலாட் ?


காந்தி குடும்பத்தை சாராத நபர் ஒருவர் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதென்றால், அதில், அசோக் கெலாட், கே.சி.வேணுகோபால், மீரா குமார், குமாரி செலிஜா, கமல்நாத், ப.சிதம்பரம், பூபேஷ் பாகல் ஆகியோருக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் சோனியா காந்தியை அண்மையில் சந்தித்துப் பேசிய நிலையில், அவருக்கு அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. 


காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் என்பதோடு, காந்தி குடும்பத்தினருக்கு நம்பிக்கையானவர் என்பதால் அவரது தலைமைக்கு எதிர்ப்பு வராது என கருதப்படுகிறது. அசோக் கெலாட்டை காங்கிரஸ் தலைவராக்குவதன் மூலம், முதலமைச்சராக வேண்டும் என்ற சச்சின் பைலட்டின் நீண்ட நாள் கோரிக்கையையும் நிறைவேற்றி வைக்க காங்கிரஸ் தலைமை கணக்கு போடுவதாக கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | நிதிஷ் ஜி எங்களுடன் கைகோர்த்தது பாஜகவுக்கு முகத்தில் அறைந்தது போல உள்ளது -தேஜஸ்வி யாதவ்


தயங்கும் அசோக் கெலாட் ?


காந்தி குடும்பத்தை சாராத ஒருவர் கட்சியை வழிநடத்துவது மிகவும் கடினமானது என்பதாலும், ராஜஸ்தான் முதலமைச்சர் பதவியை சச்சின் பைலட்டிற்கு விட்டுத் தர விரும்பாததாலும் காங்கிரஸ் தலைமையை ஏற்க அசோக் கெலாட் தயங்குவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் இது குறித்து எவ்வித கருத்துகளையும் கூறாத அசோக் கெலாட், தனக்கென்று ஒதுக்கப்பட்ட கடமைகளை மட்டுமே செய்து வருவதாகக் கூறியுள்ளார்.


சுமூகமான முடிவு எட்டப்படாத சூழலில், சோனியா காந்தியே கட்சித் தலைவராக நீடிப்பார் எனவும், ஒவ்வொரு மண்டலத்திற்கும் செயல் தலைவர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. 


மேலும் படிக்க | என்னை எப்படி அழைக்க முடியும்? ஆவேசமடைந்த கார்கே பதிலடி தந்த பியூஷ் கோயல்


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ 


மேலும் படிக்க |