ஓட்டு போடவில்லை என்றால் தற்கொலை செய்துக்கொள்ளுவேன்: பா.ஜ.க வேட்பாளர்
எனக்கு நீங்கள வாக்களிக்கவில்லை என்றால், நான் தற்கொலை செய்துக்கொள்ளுவேன் என தேர்தல் பிரசாரத்தில் வாக்கு சேகரித்த பா.ஜ.க வேட்பாளர்.
200 சட்டமன்றத் தொகுதிகளை கொண்டுள்ள ராஜஸ்தானில் அடுத்த மாதம் டிசம்பர் 7 ஆம் தேதி தேர்தல் நடைபெற விருக்கிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 11 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்சி அமைக்க பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ராஜஸ்தானில் பாஜக தங்கள் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளவும், காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றவும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்தகைய சூழ்நிலையில், சித்தோட்கட் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்து ஒரு வேட்பாளர் மக்களிடமிருந்து ஆதரவு பெற ஒரு தனித்துவமான முறையை கையில் எடுத்துள்ளார். ஆம் பா.ஜ.க வேட்பாளர் ஸ்ரீசந்த் கிருப்லானி பிரசாரத்தின், மக்கள் பார்த்து "எனக்கு நீங்கள வாக்களிக்கவில்லை என்றால், நான் தற்கொலை செய்துக்கொல்வேன்" எனக்கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே தலைமையிலனா அரசவையில் யு.டி.எச் அமைச்சராக பணியாற்றி வருகிறார் ஸ்ரீசந்த் கிருப்லானி. அவர் நிம் பாஹரா சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் மற்ற வேட்பாளர்களை போலவே ஸ்ரீசந்த் கிருப்லானியும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். கிராமப்புறத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது "எனக்கு நீங்கள வாக்களிக்கவில்லை என்றால், நான் தற்கொலை செய்துக்கொல்வேன், எனக்கு தான் நீங்கள் வாக்களிக்க வேண்டும்" எனக் கூறியப்படி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இது தவிர, தங்கள் தொகுதியை சேர்ந்த வேட்பாளர்கள், வெற்றி பெறுவதற்காக தொடர்ந்து இதுபோன்ற வித்தியாசமான பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.