உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த வரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், தாமித்த போலீசாரின் செயல் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராஜஸ்தான் மாநில ஆல்வார் என்ற பகுதியில், ரக்பர் கான் (28) என்பவர் மாடுகளை வேறு இடத்திற்கு எடுத்துக்கொண்டு தனது நண்பருடன் சென்று கொண்டிருந்தார். அதைக்கண்ட சிலர், மாடு கடத்துவதாக கருதி அவர்களைத் தாக்கினார். இந்த தாக்குதலில் ரக்பர் கான் படுகாயமடைந்தார். 


இதற்கிடையே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட பேரில் சம்பவ இடத்துக்கு வந்தனர். காயமடைந்த ரக்பர் கானை உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லாமல், முதலில் பசுக்களை பத்திரமாக கோசாலைக்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. அதன்பின்னரே காயமைடைந்த ரக்பர் கானை மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


அதுமட்டுமின்றி அவரை மருத்துமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் போலீசார் தனது வாகனத்தை நிறுத்தி தேனீர் அருந்தி, பின்னரே மருத்துவமனைக்கு சேர்த்துள்ளனர். மேலும் காயமடைந்த ரக்பர் கானை, காவல்துறையினர் அடித்ததாகவும், அவதூராக பேசியதாகவும், சம்பவத்தை நேரில் பார்த்த பெண் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார். 


முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படியில், இந்த சம்பவம் நள்ளிரவு 12.15 மணிக்கு நடந்துள்ளது. சுமார் 1:05 மணி அளவில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர். ஆனால், ரக்பர் கானை மருத்துவமனையில் சேர்க்கும்போது மணி 4 என மருத்துவமனையில் உள்ள பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


பாதுகாப்பு கொடுக்க வேண்டிய போலீசாரே இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருப்பது மக்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.