ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானேர் மாவட்டத்தில் ஒரு தம்பதியை போலீசார் கடந்த திங்கட்கிழமை (ஜன. 23) அன்று கைதுசெய்துள்ளனர். அவர்களின் 5 மாத குழந்தையை கால்வாயில் தூக்கிவீசியதற்காக அவர்கள் கைதுசெய்யப்பட்ட நிலையில், அவர்கள் அந்த கொலைக்கு கூறிய காரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராஜஸ்தானின் பிகானேரில் உள்ள சந்தாசர் கிராம அரசு பள்ளியில் உதவியாளராக பண்ணியாற்றி வந்துள்ளார், ஜான்வர்லால். அரசு பள்ளியில் ஒப்பந்ததின் அடிப்படையில் பணியாற்றி வந்த இவர், தனது பணி நிரந்தரமாவதற்காக காத்திருந்துள்ளார். ஜான்வர்லால் மற்றும் அவரது மனைவி கீதா தேவி ஆகியோருக்கு ஏற்கெனவே, இரண்டு குழந்தைகள் இருந்துள்ளன. அவர்களுக்கு மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிகிறது. 


மேலும் படிக்க | Budget 2023: நடுத்தர வர்க்கம் மகிழும் வகையில் வரி அடுக்கில் மாற்றம் இருக்குமா..!!


ஒப்பந்ததில் மாநில அரசின் விதிமுறையின்படி, பணியாளர் இரண்டு குழந்தைகள்தான் பெற்றுக்கொள்ள வேண்டும். மூன்றாவது குழந்தை பிறந்தால், அவர்களுக்கு கட்டாய பணி ஓய்வு அளிக்கப்படும். எனவே, தனது வேலையை காப்பாற்றிக்கொள்வதற்காக, வேலை நிரந்தரமாவதற்கு தடையாக இருக்கும் ஜான்வர்லால் மற்றும் அவரது மனைவி 5 மாத குழந்தையை கால்வாயில் வீசி கொலை செய்துள்ளனர். அந்த குழந்தை கால்வாயில் மூழ்கி உயிரிழந்தது. 


இச்சம்பவம் குறித்து பிகானேர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், யோகேஷ் யாதவ் தெரிவிக்கையில்,"ஜான்வர்லால் - கீதா தேவி தம்பதி அவர்களது மகளை கொலை செய்ததற்காக ஜன. 23ஆம் தேதி கைதுசெய்யப்பட்டனர். அரசு வேலையை நிரந்தரமாக்குவதற்காக மனைவியுடன் சேர்ந்து, அந்த குற்றவாளி இச்செயலை செய்துள்ளார். ஜான்வர்லால் - கீதா தேவி ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் 302, 120பி ஆகிய பிரிவுகளின்கீழ் சத்தர்கர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார். 


மேலும் படிக்க | விமானத்தில் சிறுநீர் கழித்த சம்பவம்... மீண்டும் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்!
 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ