ராஜஸ்தான் மாநிலத்தில் இருசக்கர வாகனம் ஒன்று போர்வோல்வ் வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராஜஸ்தான் மாநிலம் சிகர் நிம் கா தான் பகுதியில் இன்று காலை, போர்வோல்வ் வாகனம் ஒன்றில், இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவயிடத்திலேயே பலியாகினர்.


மேலும் இருவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனர். விஷயமறிந்து சம்பவயிடத்திற்கு வந்த காவல்துறையினர் விபத்தில் இருந்து மீட்கப்பட்டவர்களை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 


விபத்திற்கான காரணம் குறித்து எந்த தகவலும் இதுவரை இல்லை, இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்!